இட்லி கடை படம் எப்படி இருக்கும்?.. நித்யா மேனன் என்ன இப்படி ஓபனா சொல்லிட்டாங்களே

சென்னை: தனுஷின் நடிப்பில் கடைசியாக ராயன் திரைப்படம் வெளியானது. அந்தப் படம் அவரது 50ஆவது படமாகும். அப்படத்தை அவரே இயக்கியிருந்தார். ஆனால் அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. அடுத்ததாக சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்திருக்கும் அவர் இட்லி கடை என்ற படத்தை அவரே இயக்கி நடித்துவருகிறார். சூழல் இப்படி இருக்க அந்தப் படம் குறித்து அதில் நடித்திருக்கும் நடிகை நித்யா மேனன் ஓபனாக சில விஷயங்களை பேசியிருக்கிறார்.

தனுஷ் திறமைவாய்ந்த நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். தமிழ் மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் ஆகிய திரைத்துறைகளிலும் மிகப்பெரிய தாக்கத்தை அவர் ஏற்படுத்திவருகிறார். இதனால் இந்திய திரையுலகமே தனுஷை கொண்டாடிவருகிறது. அவரது நடிப்பில் கடைசியாக ராயன் திரைப்படம் வெளியானது. அப்படத்தை அவரே இயக்கி நடித்திருந்தார். அது அவரது 50ஆவது படமும்கூட. மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான அந்தப் படம் மோசமான தோல்வியை சந்தித்தது. மேலும் கடுமையான ட்ரோலையும் சந்தித்தது.

dhanush nithya menen idli kadai

குபேரா: ராயன் படத்தை முடித்திருக்கும் அவர் சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருடன் ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ஏற்கனவே தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் அவர் நடித்த வாத்தி படம் தோல்வியடைந்ததால் இந்தப் படத்தின் மூலம் தெலுங்கு இயக்குநரோடு கூட்டணி அமைத்து வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணத்தில் முழுமூச்சாக உழைத்துவருகிறார் அவர்.

அடுத்தடுத்த படங்கள்: இதற்கிடையே தனுஷின் கைகளில் ஏகப்பட்ட படங்கள் இருக்கின்றன. போர்தொழில் இயக்குநருடன் ஒரு படம், அமரன் பட இயக்குநருடன் ஒரு படம், மாரி செல்வராஜுடன் ஒரு படம், வெங்கி அட்லூரியுடன் ஒரு படம், ஹிந்தியில் ஒரு படம், ஹாலிவுட்டில் ஒரு படம் என படு பிஸியான லைன் அப்பை வைத்திருக்கிறார். அதுமட்டுமின்றி தனது உறவினர் ஒருவரை வைத்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தையும் இயக்கியிருக்கிறார். அந்தப் படம் பிப்ரவரி 21ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.

இட்லி கடை: நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை தவிர்த்து இட்லி கடை என்ற படத்தையும் இயக்கிவருகிறார் அவர். அதில் அவரே நடிக்கவும் செய்திருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்கிறார். அருண் விஜய் வில்லனாக நடிக்கிறார் என கூறப்படுகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. கண்டிப்பாக இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியடையும் என்று அவரும் அவரது ரசிகர்களும் உச்சக்கட்ட நம்பிக்கையில் இருக்கிறார்கள்.

நித்யா மேனன்: இந்நிலையில் இந்தப் படம் குறித்து நித்யா மேனன் ஒரு பேட்டியில் பேசுகையில், "இந்தப் படத்தில் எனக்கு வித்தியாசமான ரோல் கிடைத்திருக்கிறது. இட்லி கடை திரைப்படம் கண்டிப்பாக ரசிகர்களின் இதயத்தை தொடும் படமாக இருக்கும். முக்கியமாக எமோஷனலாகவும், அந்த உணர்வுகள் ரசிகர்களுக்கு கண்ணீரை வரவழைக்கும்படியும் இருக்கும்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X