லவ் டார்ச்சர்..30 போன் நம்பர்களை பிளாக் செய்துவிட்டேன்..வாலிபர் மீது நித்யா மேனன் குற்றச்சாட்டு!
சென்னை : 6 ஆண்டுகளாக தொடர்ந்து ஒரு இளைஞர் தனக்கு தொல்லை கொடுத்து வருவதாக நித்யா மேனன் கூறியுள்ளார்.
180, வெப்பம், மாலினி 22 பாளையங்கோட்டை, ஓ காதல் கண்மணி, இருமுகம், மெர்சல் போன்ற தமிழ் படங்களின் மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயம் ஆனவர் நடிகை நித்யா மேனன்.
தமிழில் நடிகர் விஜய், விக்ரம், சூர்யா, தெலுங்கில் ஜூனியர் என்டிஆர், நடிகர் நானி, அல்லு அர்ஜுன், மலையாளத்தில் பெரும்பாலான கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் நித்யா மேனன்.

நித்யா மேனன்
நித்யா மேனன் துல்கர் சர்மா இணைந்து நடித்த ஓ காதல் கண்மணி படத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது. அந்த படத்தில் இருவரின் கெமிஸ்டிரி பக்காவாக இருக்கும் இந்த படத்திலிருந்து நித்யா மேனனுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உருவானது. முன்னணி நடிகர்களில் படங்களில் நடித்திருந்தாலும், பிற்பகுதியில் பல படங்களில் இரண்டாவது கதாநாயகியாகவே நடித்து வருகிறார். இரண்டாவது கதாநாயகியாக இருந்தாலும் அலட்டிக்கொள்ளாமல் தனக்குத் கொடுக்கப்படும் கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்து வருகிறார்.

திருமண வதந்தி
இதையடுத்து, கடந்த வாரம் சோஷியல் மீடியாவில், நடிகை நித்யா மேனன், பிரபல மலையாள ஹீரோ ஒருவரைக் காதலித்து வருவதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து,திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நித்யா மேனன். சந்தோஷ் வர்க்கி என்கிற இளைஞர் தான் திருமண வதந்தி பரவக்காரணம், அவர் என்னை திருமணம் செய்து ஆசைப்படுவதாக பேட்டியில் கூயிருந்தார்.

6 ஆண்டுகளாக தொல்லை
அந்த இளைஞர் கடந்த 6 ஆண்டுகளாக என்னை காதலித்து வருவதாக கூறி எனக்கு தொல்லை கொடுத்து வருகிறார். பல்வேறு புதிய எண்களிலிருந்து எனக்கு போன் செய்து தொல்லை கொடுத்தார். இதுவரை அவரிடமிருந்து எனக்கு வேறு வேறு புதுபுது தொலைபேசி எண்ணில் இருந்து 30 அழைப்புகள் வந்துள்ளன அனைத்தையும் பிளாக் செய்துவிட்டேன்.

அப்பா அம்மாவுக்கும் தொல்லை
அது மட்டும் இல்லாமல் என் அப்பா, அம்மாவிற்கும் போன் செய்து தொல்லை கொடுத்து வருகிறார். பொதுவாக அவர்கள் யாரிடமும் கோபமாக பேசமாட்டார்கள். அவர்களையும் அந்த இளைஞர் கோபப்படுத்திவிட்டார். இதுகுறித்து போலீசில் புகார் கொடுக்கச் சொன்னார்கள், நான் தான் அவர் ஏதோ சிக்கலில் இருக்கிறார் என்று மன்னித்து விட்டுவிட்டேன் ஆனாலும், அவர் தற்போது பேட்டியில் திருமணம் வதந்தியை பரப்பி விட்டுள்ளார் என கூறியுள்ளார். இது மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











