“இது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்..” கோவா பட விழாவில் ஷாக் தந்த நித்யாமேனன்!

சினிமா தனக்கு ஒத்துவராது என்பதால் ஒதுங்கி இருந்ததாக நடிகை நித்யா மேனன் தெரிவித்துள்ளார்.

Recommended Video

“இது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்..” ஷாக் தந்த நித்யா!

பனாஜி: சினிமா மீதான தனது காதல் பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்ட திருமணம் போன்றது என நடிகை நித்யா மேனன் தெரிவித்துள்ளார்.

இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதும் இருந்து ஏராளமான திரைப்பட வல்லுனர், நடிகர், நடிகையர், இயக்குனர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டு இருக்கிறார்கள்.

இந்த நிகழ்வில் தினமும் திரைத்துறையை சேர்ந்தவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறும். நேற்றைய கலந்துரையாடலில் நடிகை நித்யா மேனன் கலந்துகொண்டார்.

சினிமா செட்டாகாது

சினிமா செட்டாகாது

அப்போது பேசிய அவர், " என்னுடைய கேரக்டர் சினிமாவுக்கு சுத்தமாக செட்டாகாது. காடுகளில் அலைந்து திரிந்து, மிருகங்களை பற்றி படமெடுத்துக்கொண்டிருக்க வேண்டும் என்பது தான் எனது ஆசை. ஆனால் சந்தர்ப்ப சூழலால் நடிகையாகிவிட்டேன்.

சினிமா காதல்

சினிமா காதல்

ஆனால் சமீபகாலமாக நான் சினிமாவை மிகவும் நேசிக்க ஆரம்பித்துவிட்டேன். இது ஒரு அழகான துறை. இதன் மூலம் மக்களின் மனநிலையை என்னால் மாற்ற முடிகிறது.

அரேஞ்சுடு மேரேஜ்

அரேஞ்சுடு மேரேஜ்

எனது சினிமா வாழ்க்கை பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் போன்றது. காதல் திருமணம் போன்று, எடுத்த உடனே கணவன் - மனைவிக்குள் அந்நோன்யம் பிறந்துவிடாது. அரேஞ்சுடு மேரேஜில் நாளாக ஆக தான் ஆழமான காதல் உருவாகும். அதுபோல் தான் எனக்கு சினிமா மீது இப்போது காதல் வந்துள்ளது.

வேலை வாங்க முடியாது

வேலை வாங்க முடியாது

எனக்கு மெத்தட் ஆக்டிங் எல்லாம் தெரியாது. என்னை யாராலும் அதிகமாக வேலை வாங்க முடியாது. சீன்களை படித்து, புரிந்துகொண்டு நானாகவே நடித்துவிடுவேன். அது தானாகவே வந்துவிடும்", என நித்யா மேனன் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X