அடுத்த மாதம் நித்யா மேனன் மாதம்: என்ன புரியலையா?
சென்னை: நித்யா மேனன் நடித்துள்ள படங்கள் ஏப்ரல் மாதம் அடுத்தடுத்து ரிலீஸாகின்றன.
நித்யா மேனன் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி படங்களில் நடித்து வருகிறார். அவர் தற்போது தமிழில் முனி 3 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் நடித்துள்ள 5 படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளன.
ஏப்ரல் மாதம் நித்யா மேனன் மாதம் என்று கூறலாம்.

ரிலீஸ்
நித்யா நடித்துள்ள சன் ஆப் சத்யமூர்த்தி என்ற தெலுங்கு படம், ஓகே கண்மணி, காஞ்சனா 2 ஆகிய தமிழ் படங்கள் ஏப்ரல் மாதம் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகின்றன.

ஓகே கண்மணி
மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான் ஜோடியாக நித்யா நடித்துள்ள ஓகே கண்மணி ஓகே பங்காரம் என்ற பெயரில் அடுத்த மாதம் தெலுங்கிலும் ரிலீஸாகிறது.

காஞ்சனா 2
ராகவா லாரன்ஸ் பேயாக வந்து மிரட்டும் காஞ்சனா 2 படம் ஏப்ரல் இறுதி வாரத்தில் ரிலீஸாகிறது. தமிழ், தெலுங்கில் ரிலீஸாகும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நித்யா.

ருத்ரமா தேவி
அனுஷ்காவை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள ருத்ரம்மா தேவி படத்தில் நித்யா மேனனும் நடித்துள்ளார். ருத்ரமா தேவி வரும் மே மாதம் ரிலீஸாகிறது.


Click it and Unblock the Notifications











