சமந்தா படத்தில் 3வது ஹீரோயினாக நடிக்கும் நித்யா மேனன்!

சென்னை: சமந்தா நாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ள திருவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நாயகனாக நடிக்கும் படத்தில் நித்யாமேனன் மூன்றாவது நாயகியாக நடிக்க உள்ளார். இப்படத்தில் இரண்டாவது நாயகியாக அடா சர்மா நடிக்கிகிறார்.

தனது குடும்பப்பாங்கான நடிப்பால் வெப்பம், பாளையங்கோட்டை படங்கள் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மலையாள நடிகை நித்யா மேனன்.

இவர் தற்போது மணிரத்னத்தின் ஓகே கண்மணி என்ற புதிய படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

துல்கர் சல்மான் ஜோடியாக...

துல்கர் சல்மான் ஜோடியாக...

துல்கர் சல்மான் நாயகனாக நடிக்கும் அப்புதிய படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் தயாராகி வருகிறது.இப்படத்தின் படப்பிடிப்புகள் மும்முரமாக நடந்து வருகிறது.

3வது நாயகி...

3வது நாயகி...

இது தவிர அல்லு அர்ஜூன் ஜோடியாக திருவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் புதிய படமொன்றில் மூன்றாவது நாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார் நித்யாமேனன்.

அடுத்தகட்ட படப்பிடிப்பில்...

அடுத்தகட்ட படப்பிடிப்பில்...

ஏற்கனவே, இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பில் நித்யாவும் பங்கேற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமந்தா படம்...

சமந்தா படம்...

தனது திறமையான நடிப்பால் தமிழ் மற்றும் மலையாளத்தில் குறிப்பிடத் தக்க நடிகையாக அந்தஸ்து பெற்றுள்ள நித்யா மேனன், சமந்தா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் மூன்றாவது நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X