ஜானி மாஸ்டர் பற்றி என்னிடம் கேட்காதீர்கள்?.. ஆனால் ஒன்று.. நித்யா மேனன் செம தெளிவு போங்க

ஹைதராபாத்: பிரபலமான நடன அமைப்பாளராக இருப்பவர் ஜானி மாஸ்டர். திருச்சிற்றம்பலம் படத்துக்காக தேசிய விருதையும் பெற்றிருக்கிறார். ஏராளமான தமிழ் படங்கள், தெலுங்கு படங்களில் பணியாற்றியிருக்கும் அவர் மீது பெண் நடன கலைஞர் ஒருவர் பாலியல் புகார் கொடுத்ததை அடுத்து ஜானி மாஸ்டர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அதனையடுத்து அவருக்கு கொடுக்கப்பட்டிருந்த தேசிய விருது திரும்ப பெறப்பட்டது. சூழல் இப்படி இருக்க நித்யா மேனனிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

கோலிவுட், டோலிவுட் உள்ளிட்ட திரைத்துறையில் ஃபேமஸான நடன அமைப்பாளராக வலம் வந்துகொண்டிருப்பவர் ஜானி மாஸ்டர். எந்தப் படமாக இருந்தாலும் கூப்பிடுங்கள் ஜானி மாஸ்டரை என்ற நிலையில் இருக்கிறார் அவர். தமிழில் வாரிசு, பீஸ்ட், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட ஏராளமான படங்களின் பாடல்களுக்கு நடனம் அமைத்திருக்கும் அவர்; மேகம் கருக்காதா பெண்ணே பாடலுக்கு கடந்த வருடம் தேசிய விருதையும் பெற்று அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

nithya menon tamil cinema


விமர்சனம்: அவரது நடன அமைப்புகள் பல பாடல்களில் இருந்தாலும் விமர்சனங்களையும் அதிக அளவு சந்தித்திருக்கிறார் அவர். முக்கியமாக பீஸ்ட், வாரிசு படங்களின் பாடல்களுக்கு அவர் அமைத்த நடன அசைவுகள் பெரும் ட்ரோலுக்கு உள்ளாகின. மேலும் விஜய் என்ற அசால்ட் டான்ஸரையே இப்படி வேஸ்ட் ஆக்கிவிட்டாரே ஜானி என்று பலர் ஓபனாகவே பேச ஆரம்பித்தார்கள். இருந்தாலும் ஜானியின் நடனத்துக்கென்று பலரும் ரசிகர்களாக இருக்கிறார்கள் என்பது எதார்த்தம்.

பாலியல் புகார்: சூழல் இப்படி இருக்க ஜானி மாஸ்டர் மீது பெண் நடன கலைஞர் ஒருவர் பாலியல் புகார் கொடுத்தார். அதாவது, ஜானி மாஸ்டர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார் என்று தெரிவித்திருந்தார். புகார் அளித்த பெண் ஜானியிடம் உதவி நடன இயக்குநராக வேலை செய்தவர். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து ஜானி மாஸ்டர் தலைமறைவானார். ஆனால் அவர் கோவாவில் வைத்து கைது செய்யப்பட்டார். அதனையடுத்து தனது கணவர் மீது சுமத்தப்பட்ட பாலியல் புகார் உண்மை என்றால் கணவரை பிரிய தயார் என்று ஓபனாகவே பேசினார் ஜானியின் மனைவி.

ஜானி மாஸ்டர் வாக்குமூலம்:இந்நிலையில் ஜானியிடம் மேற்கொண்ட விசாரணையின்போது அவர் வாக்குமூலம் அளித்ததாக சில தகவல்கள் வெளியாகின்றன. அவர் அளித்த வாக்குமூலத்தில், “பாலியல் ரீதியாக என் மீது பெண் சுமத்திய குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் ஆதாரமற்றவை. அவர் ஒரு நிகழ்ச்சியில்தான் எனக்கு பழக்கமானார். அவர் மைனராக இருந்தபோது நான் அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக பொய் சொல்கிறார்’ என தெரிவித்ததாக தகவல் கசிந்தது.

நித்யா மேனன்: ஜானி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து திருச்சிற்றம்பலம் படத்தில் பறக்க பறக்க பாடலுக்கு கொடுக்கப்பட்ட தேசிய விருது திரும்பப் பெறப்பட்டது. இந்நிலையில் நடிகை நித்யா மேனன் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் இதுகுறித்து கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த நித்யா, “இதைப் பற்றி என்னிடம் கேட்கவில்லை. ஆனால் ஒன்று அந்தப் பாடலுக்கு சிறப்பாக நடனம் அமைக்கப்பட்டிருந்தது. தேசிய விருதுக்கு தகுதியான பாடல்தான் அது” என்றார். நித்யா மேனன் அடுத்ததாக தமிழில் தனுஷுடன் இட்லி கடை என்ற படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X