Nithya Menon -ஆண்கள்தான் ரொம்பவே பாவம்.. நித்யா மேனன் செம சப்போர்ட்.. ட்ரெண்டாகும் பேட்டி

சென்னை: நடிகை நித்யா மேனன் தமிழ், மலையாளம், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். சிறந்த நடிகை என்று பெயர் எடுத்திருக்கும் அவர் கடைசியாக தமிழில் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்தார். தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் வந்துகொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஆண்கள் பற்றி பேசியது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நித்யா மேனன் ஹனுமன் என்ற இந்திய - ஆங்கில படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 1998ஆம் ஆண்டு அறிமுகமான அவர் அதற்கு பிறகு 2006ஆம் ஆண்டு 7 O'Clock என்ற கன்னட படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு 2008ஆம் ஆண்டு ஆகாஷ கோபுரம் என்ற படத்தின் மூலம் மலையாளத்தில் நடிகையாக அறிமுகமானார்.

Nithya Menon Talks about Mens at Latest Interview

வரிசையான வாய்ப்புகள்: கன்னடத்திலும்,மலையாளத்திலும் தான் அறிமுகமான படங்களில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் காரணமாக தொடர்ந்து அந்த மொழிகளில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன்படி மலையாளத்தில் வெள்ளதூவல், கேரளா கஃபே, ஏஞ்சல் ஜான், அபூர்வ ராகம், அன்வர் என வரிசையாக் நடித்தார். அந்தப் படங்களிலும் அவருக்கு சிறந்த நடிகை என்ற பெயர் கிடைத்தது. மலையாளத்தில் இப்படி பிஸியாக இருந்த அவர் தெலுங்கிலும் அறிமுகமானார்.

தமிழில் நித்யா மேனன்: இப்படி கன்னடம், மலையாளம், தெலுங்கு என ரவுண்டு கட்டி நடித்து வந்த நித்யா மேனன் தமிழில் 180 என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதனையடுத்து வெப்பம், மாலினி 22 பாளையங்கோட்டை,ஜேகே என்னும் நண்பனின் வாழ்க்கை, காஞ்சனா 2, ஓ காதல் கண்மணி, இருமுகன், மெர்சல், சைக்கோ, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

திருச்சிற்றம்பலம்: அவரது தமிழ் கரியரில் ஓ காதல் கண்மணியும், திருச்சிற்றம்பலமும் முக்கியமான படங்களாக அமைந்தன. குறிப்பாக திருச்சிற்றம்பலத்தில் ஷோபனா கதாபாத்திரத்தில் அதகளம் செய்திருப்பார். குறிப்பாக பாரதிராஜாவுடன் இணைந்து அவர் செய்யும் சேட்டைகளும், தனுஷ் மேல் இருக்கும் காதலை வெளிக்காட்ட முடியாமல் திணறும் இடத்திலும் நித்யா மேனனின் நடிப்பு அப்ளாஸை அள்ளியது குறிப்பிடத்தக்கது.

அழுகை பலம்தான்: அழுவது பெண்களுக்கு நிச்சயமாக ஒரு பலம்தான். நானும் அப்படித்தான். ஆனால் ஆண்களை நினைத்தால்தான் எனக்கு பரிதாபமாக இருக்கிறது. பாவம் அவர்களால் அழ முடியாது. சிறு வயது முதலே ஆண்கள் என்றால் அழக்கூடாது என்று சொல்லி சொல்லி அவர்கள் வளர்க்கப்படுகிறார்கள். அவர்கள் மிகவும் பாவம்.

அழுவது உண்மையில் நல்லது. மனதில் இருக்கும் பாரத்தை எல்லாம் அழுது முடித்து இறக்கி வைத்திடலாம். அது உங்களை வலிமையாக்கும். அந்த பாரத்தை அழுது முடித்து இறக்கிவிட்டு அடுத்து என்ன வேலையோ அதை நோக்கி நகர்ந்திட வேண்டும். என்னைப் பொறுத்தவரை வயது அதிகமாக அதிகமாக அதை எதிர்கொள்ளும் நேரம் குறையும். இப்போதெல்லாம் சீக்கிரமே என்னுடைய கஷ்டத்திலிருந்து வெளியே வந்துவிடுகிறேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X