Nivetha Pethuraj: இஸ்லாமியரை காதலிக்கும் நிவேதா பெத்துராஜ்.. அட திருமண தேதியும் முடிவு பண்ணிட்டாங்களா?
சென்னை: நடிகை நிவேதா பெத்துராஜ் தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். மதுரையில் பிறந்து வளர்ந்த நிவேதா பெத்துராஜ் தனது குடும்பத்துடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே துபாயில் செட்டில் ஆகிவிட்டார்.
பட வாய்ப்புகள், வெப்சீரிஸ் என அவ்வப்போது கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி நடித்து வந்த நிவேதா பெத்துராஜ் கார் ரேஸிங்கிலும் ஆர்வம் செலுத்தி வந்தார். இந்நிலையில், இவரை போலவே கார் பந்தயத்தில் அதிக ஆர்வம் உள்ள ரஜித் இப்ரான் என்பவரைத் தான் காதலித்து வருகிறார்.

ஏகப்பட்ட விமர்சனங்கள், கிசுகிசுக்கள் வந்த போது கூட தனது காதல் பற்றி வெளியே சொல்லாமல் அமைதி காத்து வந்த நிவேதா பெத்துராஜ் விரைவில் திருமணமாகவுள்ள நிலையில், காதலனை அறிமுகப்படுத்தியுள்ளார்.
நடிகை நிவேதா பெத்துராஜ்: 2016ம் ஆண்டு வெளியான ஒருநாள் கூத்து படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நிவேதா பெத்துராஜ். 1991ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி பிறந்த நிவேதா பெத்துராஜுக்கு 34 வயதாகிறது. உதயநிதி ஸ்டாலின் உடன் இணைந்து பொதுவாக எம்மனசு தங்கம் படத்தில் நடித்த இவர், ரவி மோகனுடன் டிக் டிக் டிக், விஜய் ஆண்டனியுடன் திமிரு புடிச்சவன், விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன் மற்றும் பிரபுதேவாவுடன் பொன்மாணிக்கவேல் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடித்த அலா வைகுந்தபுரமுலோ படத்தில் துணை நடிகையாக நடித்த இவர், டோலிவுட்டிலும் பல படங்கள் மற்றும் ஒரு வெப்சீரிஸ் உள்ளிட்டவற்றில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு வெளியான பருவு வெப்சீரிஸுக்குப் பிறகும் இவர் பெரிதாக படங்களில் ஏதும் கமிட்டாகவில்லை.
காதலனை அறிமுகப்படுத்திய நிவேதா பெத்துராஜ்: கார் பந்தயத்தில் தனது ஆர்வத்தை செலுத்தி வந்த நிவேதா பெத்துராஜ் அதே ஆர்வத்தில் இருந்த ரஜித் இப்ரான் உடன் காதல் ஏற்பட்ட நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணமும் செய்துக் கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பலரும் ஜோடியாக போட்டோக்களை வெளியிட்டு வந்த நிலையில், நேற்று இரவு தனது காதலனுடன் இருக்கும் புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார் நிவேதா பெத்துராஜ்.
குவியும் வாழ்த்துகள்: நடிகை நிவேதா பெத்துராஜ் தனது காதலனை அறிமுகப்படுத்திய நிலையில், அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். துபாயில் தொழிலதிபராக ரஜித் இப்ரான் உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஈஷா ரெப்பா, அம்ருதா ஸ்ரீனி உள்ளிட்ட நடிகைகளும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











