மாடியில நிக்கிற மானுகுட்டி... நிவேதா பெத்துராஜ் மொட்டை மாடி செல்பியை வர்ணிக்கும் ரசிகர்கள் !

சென்னை : பொன் மாணிக்கவேல், பார்ட்டி ஆகிய படங்கள் நடிகை நிவேதா பெத்துராஜ்- க்கு தமிழில் ரிலீசாக உள்ளன.

தெலுங்கில் அலா வைகுண்டபுரம்லோ படத்தில் நடித்து மிகவும் பிரபலமடைந்த இவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

சமீபத்தில் கார் ரேஸில் கலந்து கொண்ட வீடியோ ரசிகர்களை வியக்க வைத்த நிலையில் இப்பொழுது துளிக்கூட மேக்கப் இல்லாமல் மொட்டை மாடியில் எடுத்த க்யூட் செல்பி புகைப்படங்களை ரசிகர்கள் வர்ணித்து வருகிறார்.

தெலுங்கில் வசூல்

தெலுங்கில் வசூல்

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2020ஆம் ஆண்டு தெலுங்கில் வசூல் சாதனை படைத்த அலா வைகுண்டபுரம்லோ படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்து தெலுங்கு ரசிகர்களின் ஃபேவரைட் கதாநாயகியாக இப்போது மாறியுள்ள நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழில் ஒரு நாள் கூத்து என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர்.

கிளாமர் தூக்கலாகவே

கிளாமர் தூக்கலாகவே

பொதுவாக எம்மனசு தங்கம்,டிக் டிக் டிக் ,திமிரு புடிச்சவன்,செந்தமிழன் ஆகிய படங்களை தொடர்ந்து வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகியுள்ள பார்ட்டி படத்தில் நடித்துள்ளார். எப்பொழுதும் கலர்ஃபுல்லான படங்களை எடுக்கும் வெங்கட்பிரபு இந்த படத்தில் கொஞ்சம் தூக்கலாகவே கிளாமர் காட்சிகளை மிகைப்படுத்தி படத்தின் டைட்டிலுக்கு ஏற்றவாறு படம் முழுவதும் பார்ட்டியாக இருக்கும் என தெரியவந்துள்ளது .

Recommended Video

Nivedha Pethuraj Race Car பக்கம் திரும்பியுள்ளார் | Lady Thala Ajith, Car Racing
விராட பருவம்

விராட பருவம்

பல வித்தைகளை கையில் வைத்திருக்கும் நிவேதா பெத்துராஜ் சமீபத்தில் கார் ரேஸில் கலந்து கொண்டு அதிவேகமாக காரை ஓட்டி முதல் சுற்றை வெற்றிகரமாக முடித்த வீடியோவை சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு செம வைரல் ஆனது. தமிழைத் தொடர்ந்து தெலுங்கிலும் இவருக்கு வாய்ப்புகள் பல குவிந்து வருகிறது. அந்த வகையில் சாய்பல்லவி, ராணா இணைந்து நடித்திருக்கும் விராட பருவம், பாகல் ஆகிய படங்கள் வெளியாக உள்ளன.

துளிக்கூட மேக்கப்

துளிக்கூட மேக்கப்

தமிழில் நடித்துள்ள பார்ட்டி மற்றும் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்கள் விரைவில் ஓடிடியில் ரிலீஸாக இருக்கும் நிலையில் மொட்டை மாடியில் மேக்கப் இல்லாமல் நெற்றியில் ஒரே ஒரு ஸ்டிக்கர் பொட்டுடன் எடுத்த செல்பி புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மாடியில நிற்கிற மானுகுட்டி என வர்ணித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X