Nivetha Pethuraj: பல கோடி ரூபாய் வீடு, கார் ரேஸ்.. மனம் திறந்த நிவேதா பெத்துராஜ்.. கொந்தளிக்கும் ரசிகர்கள்!

Nivetha Pethuraj News in Tamil: நடிகை நிவேதா பெத்துராஜுக்கு அரசியல் வாரிசு பல கோடி ரூபாய் செலவு செய்வதாக பத்திரிகையாளர் ஒருவர் பரப்பிய குற்றச்சாட்டுக்கு நிவேதா பெத்துராஜ் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

திரிஷா மாதிரி தைரியமாக நிவேதா பெத்துராஜ் பேசவில்லை என்பதால் விஷயம் உண்மை தானோ என்றே நெட்டிசன்கள் பேசத் தொடங்கினர். ஆனால், தவறாக பேசி என்னையும் என் குடும்பத்தையும் காயப்படுத்திட்டீங்க என நிவேதா பெத்துராஜ் மனம் திறந்த நிலையில், ரசிகர்கள் அவருக்கு முழு ஆதரவையும் வழங்கி வருகின்றனர்.

Fans support Nivetha Pethuraj and asks her to file defamation case against fake spreader

இந்த விவகாரத்தில் பெயரைக் குறிப்பிட்டு தவறாக பேசிய அந்த நபரை சும்மா விடாதீங்க நிவேதா பெத்துராஜ் சட்டப்படி நடவடிக்கை எடுங்க என ரசிகர்கள் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

குடும்பத்தையே கஷ்டப்படுத்திட்டீங்க: நடிகை திரிஷா குறித்து சமீபத்தில் தவறாக அரசியல்வாதி ஒருவர் பேசிய நிலையில், அவருக்கு எதிராக திரிஷா சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில், நடிகை நிவேதா பெத்துராஜ் குறித்து மோசமான வார்த்தைகளை வெளிப்படையாக பிரபல பத்திரிகையாளர் பேசியது சர்ச்சையை கிளப்பியது. அவரது பேச்சைக் கேட்டு தானும் தனது குடும்பமும் மனதளவில் உடைந்து போய் விட்டோம் என நிவேதா பெத்துராஜ் குறிப்பிட்டுள்ளார்.

20 படங்கள்: 2016ம் ஆண்டு வெளியான ஒருநாள் கூத்து படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். மதுரையில் பிறந்து வளர்ந்த அவர் கடந்த 20 ஆண்டுகளாக பெற்றோர்களுடன் துபாயில் தான் வசித்து வருவதாகவும் சினிமாவில் நடிக்கத் தான் சென்னைக்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளார். 16 வயதிலேயே சொந்தக்காலில் நிற்க ஆரம்பித்து விட்டேன் என்றும் பணத்துக்காக யாரையும் நாட வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்றும் கூறியுள்ளார். ஒரு நாள் கூத்து படத்திற்கு பிறகு பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன், அலா வைகுந்தபுரமுலோ, பொன் மாணிக்கவேல், பிளடி மேரி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

பங்களா வீடு, கார் ரேஸ்: அரசியல் பிரபலம் ஒருவர் நிவேதா பெத்துராஜுக்கு துபாயில் பங்களா வீடு வாங்கி கொடுத்திருப்பதாகவும் பல கோடி ரூபாய் செலவில் சென்னையில் கார் பந்தயம் நடத்தப் போவதாகவும் நடிகை மீதான ஈர்ப்பு தான் இதற்கெல்லாம் காரணம் என பத்திரிகையாளர் ஒருவர் பேசியது சர்ச்சையை கிளப்பிய நிலையில், தற்போது அதற்கு மறுப்பு தெரிவித்து பதிலடி கொடுத்துள்ளார் நிவேதா பெத்துராஜ்.

Fans support Nivetha Pethuraj and asks her to file defamation case against fake spreader

சட்டப்படி நடவடிக்கை எடுங்க: நிவேதா பெத்துராஜ் மற்றும் அவருடன் அரசியல் தலைவரை சம்பந்தப்படுத்தி பேசிய நிலையில், அவரை சும்மா விடாதீங்க என்றும் மான நஷ்ட வழக்குப் போடுங்க என ரசிகர்கள் தற்போது நிவேதா பெத்துராஜின் ட்வீட்டுக்கு கீழ் கமெண்ட் போட்டு வருகின்றனர். ரசிகர்களை தாண்டி பல ப்ளூ டிக் பிரபலங்களும் நிவேதா பெத்துராஜுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.

ஒன்று திரண்ட ரசிகர்கள்: நிவேதா பெத்துராஜின் ரசிகர்கள் உறுதியாக இருங்க நிவேதா, எதற்கும் கவலைப்படாதீங்க, நாங்க உங்களுக்கு துணையா இருப்போம். தைரியமாக தப்பா பேசியவர்களை சும்மா விடாமல் வழக்கு போடுங்க என பலரும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X