பஞ்சுமிட்டாய் கலரு… தேனு மிட்டாய் உதடு.. நிவேதாய்யா.. சூப்பர் போஸுய்யா!

சென்னை : நிவேதா பெத்துராஜ் புதிய போட்டோசூட்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதைபார்த்த ரசிகர்கள் பஞ்சுமிட்டாய் கலரு, தேனுமிட்டாய் உதடு என்று கமெண்டுகளை போட்டு வர்ணித்து வருகின்றனர்.

தமிழில் ஒருநாள் கூத்து படத்தின் மூலம் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ், தற்போது தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாக்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். தென்னிந்திய சினிமாவில் முக்கிய இடத்தை பிடிக்க வேண்டும் என்று நிவேதா மிக முனைப்புடன் செயல்பட்டு வருகிறார் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நிவேதா.

 Nivetha pethuraj photoshoot

நம்ம தமிழ்நாட்டு பெண் மாடலாக இருந்து தமிழ் சினிமாவிற்குள் நுழைந்து தெலுங்கு திரையுலகில் அல்லு அர்ஜுன் படத்தில் நடிக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார் நிவேதா பெத்துராஜ்.

தூத்துக்குடி பெண்ணான இவர், சிறு வயதிலே துபாய் சென்று விட்டார். தனது படிப்பை அங்கே முடித்த நிவேதாவுக்கு மாடலிங் துறையின் மீது ஏற்பட்ட ஆசையால் அங்கு மாடலிங் கற்றுக்கொண்டு 2015 ஆம் ஆண்டு துபாயில் நடைபெற்ற அரபு நாட்டு மிஸ் இந்தியா அழகி போட்டியில் 15 போட்டியாளர்கள் பங்கேற்ற போட்டியில் இவர் வெற்றி பெற்றார்.

 Nivetha pethuraj photoshoot

பின் 2016 ஆம் ஆண்டு ஒரு நாள் கூத்து படத்தில் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார் நிவேதா பெத்துராஜ். அப்படத்தில் காவியா என்ற கதாபாத்திரத்தில் அட்டைக்கத்தி தினேசுடன் நடித்து இருப்பார். இந்த கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டது. பின்னர் பல படங்களில் நடித்தார் கடைசியாக விஜய் சேதுபதி உடன் சங்கத்தமிழன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

 Nivetha pethuraj photoshoot

பல பிரபலங்களை போல நிவேதாவும் புகைப்படங்களை எடுத்து வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ட்ராண்டாகி உள்ளது. பஞ்சு மிட்டாய் கலரில் அவர் அணிந்து இருக்கும் ஆடை மிக நேர்த்தியாக உருவாக்க பட்டிருக்கிறது. அந்த ஆடையில் தற்போது நிவேதா பெத்துராஜ் போட்டோசூட் எடுத்தும் விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். அதை அவர் தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி இருக்கிறார்.

நிவேதா அடுத்தாக பார்ட்டி படத்தில் நடித்து இருக்கிறார். மேலும் ஜகச்ஜால கில்லாடி மற்றும் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X