புட்டபொம்மாவாக மாறிய நிவேதா பெத்துராஜ்... அட பொம்மை மாதிரியே இருக்காங்களே!

சென்னை : இயக்குனர் வெங்கட் பிரபுவின் பார்ட்டி திரைப்படத்தில் படுகவர்ச்சியான உடையில் நடித்திருக்கும் நிவேதா பெத்துராஜ் இப்பொழுது ஜெகஜாலக்கில்லாடி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் போதே அடியே அழகே என ரசிகர்கள் அனைவரையும் கெஞ்ச வைத்த இவர் இப்பொழுது பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருவதோடு தெலுங்கிலும் கால் தடத்தை பதித்து வெற்றிக் கொடி நாட்டி வருகிறார்.

இந்த நிலையில் இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பார்க்க அசப்பில் புட்ட பொம்மா மாதிரியே க்யூட்டாக உடையணிந்து தொடைத்தெரிய சுழன்று ஆடும் புகைப்படங்கள் ரசிகர்களின் மனதில் தீப்பிடிக்க வைத்துள்ளது.

கதாநாயகியாக

கதாநாயகியாக

தமிழ் குடும்பத்தில் பிறந்த நடிகை நிவேதா பெத்துராஜ் மாடல் அழகியாக வாழ்க்கையை தொடங்கிய நிலையில் தமிழ் சினிமாவிற்கு ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார்.

தெலுங்கு சினிமாவிலும்

தெலுங்கு சினிமாவிலும்

முதல் படத்திலேயே ரசிகர்களை அடியே அழகே என கெஞ்ச வைத்த இவர் அடுத்தடுத்து திரைப்படங்களில் கதாநாயகியாக வட்டமிட்டு வர தமிழ் சினிமாவைத் தாண்டி இப்பொழுது தெலுங்கு சினிமாவிலும் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து பிரபலமாகி உள்ளார்.

இரண்டாம் கதாநாயகியாக

இரண்டாம் கதாநாயகியாக

அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி உலக அளவில் வசூலில் பல்வேறு சாதனைகளை புரிந்து தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்த அலா வைகுண்டபுரம்லோ திரைப்படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்திருக்கும் இவர் தமிழில் அருண் விஜய் நடிப்பில் வெளியான தடம் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக நடித்து அசத்தியுள்ளார்.

படு கவர்ச்சி காட்டி

படு கவர்ச்சி காட்டி

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இதுவரை கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்த நிவேதா பெத்துராஜ் வெங்கட்பிரபுவின் கலர்ஃபுல்லான இயக்கத்தில் உருவாகியிருக்கும் பார்ட்டி திரைப்படத்தில் இதுவரை காட்டாத அளவிற்கு படு கவர்ச்சி காட்டி நடித்துள்ளதாக சொல்லப்பட்டு வரும் நிலையில் அதில் ஒரு பாடலில் பீச்சில் செம ஆட்டம் போட்டு இருக்க அனைவரையும் சூடேத்தி உள்ளார்.

புட்டபொம்மா புட்டபொம்மா‘

புட்டபொம்மா புட்டபொம்மா‘

பொன் மாணிக்கவேல், ஜெகஜாலக்கில்லாடி, பார்ட்டி என தமிழில் அடுத்தடுத்த திரைப்படங்கள் இவருக்கு ரிலீசாக உள்ள நிலையில் இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புட்டபொம்மா போல க்யூட்டான பிங்க் கௌன் அணிந்து கொண்டு தொடைத்தெரிய சுழன்று ஆடும் புகைப்படத்தை பதிவிட்டதை அடுத்து அனைவரும் இவரை புட்டபொம்மா என வர்ணித்து வர இந்த புகைப்படங்கள் இப்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X