உங்ககிட்ட கத்துக்கணும்..'தாராள பிரபு' பார்த்துவிட்டு நடிகர் விவேக்கை தாராளமாகப் பாராட்டும் நடிகை!
சென்னை: தாராள பிரபு படத்தைப் பார்த்துவிட்டு நடிகர் விவேக்கை பாராட்டித் தள்ளி இருக்கிறார் பிரபல ஹீரோயின்!
Recommended Video
நெல்சன் வெங்கடேசன் இயக்கிய, ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர்.
இந்தப் படம் கவனிக்கப்பட்டதை அடுத்து, பொதுவாக எம்மனசு தங்கம் படத்தில் உதயநிதி ஜோடியாக நடித்தார்.

திமிரு பிடிச்சவன்
பார்த்திபன், சூரி உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படத்தை தளபதி பிரபு இயக்கியிருந்தார்.
இதையடுத்து ஜெயம் ரவி ஜோடியாக, டிக் டிக் டிக் படத்தில் நடித்தார். இந்தப் படம் ஹிட்டானது. பின்னர் விஜய் ஆண்டனி ஜோடியாக, 'திமிரு பிடிச்சவன்' படத்தில் நடித்திருந்தார். அடுத்து விஜய் சேதுபதி ஜோடியாக, சங்கத்தமிழன், பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

மளிகை பொருட்கள்
தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பொதுமக்களுடன் நடிகர், நடிகைகளும் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். இந்நிலையில், நடிகை நிவேதா பெத்துராஜ் மாஸ்க் அணிந்தபடி மளிகை பொருட்கள் வாங்க முன் கடைக்குச் சென்ற புகைப்படத்தை சில நாட்களுக்கு முன் பதிவிட்டிருந்தார்.

நடிகர் விவேக்
அதற்கு ரசிகர்கள் கண்டபடி கலாய்த்து கமென்ட் போட்டிருந்தனர். இந்நிலையில் விவேக், ஹரிஷ் கல்யாண், தான்யா நடித்துள்ள தாராளபிரபு படத்தை அமேசானில் பார்த்துள்ளார் நிவேதா. இதையடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நடிகர் விவேக்கை தாராளமாகப் பாராட்டியுள்ளார்.

தாராள பிரபு
'சின்ன வயசுல இருந்தே எனக்கும் எங்க குடும்பத்துக்கும் விவேக் சாரை ரொம்ப பிடிக்கும். அவர் காமெடிக்கு பின்னால ஒரு சமூக கருத்து இருக்கும். அதை அப்பா, அம்மா ரொம்ப விரும்பிப் பார்ப்பாங்க. இப்ப, தாராள பிரபு படத்தைப் பார்த்தபிறகு அவர் மீதான மரியாதை இப்ப அதிகரிச்சிருக்கு. விவேக் சார், இந்த வீடியோ உங்களை ரீச் பண்ணும்னு நினைக்கிறேன்.

சமூக சேவை
ஒரு நடிகையா, உங்ககிட்ட இருந்து நிறைய கத்துக்க வேண்டியிருக்கு. ஹியூமன் பீயிங்காவும் உங்ககிட்ட இருந்து நிறைய கத்துக்கணும். மரம் நடுறது மாதிரியான உங்க சமூக சேவையை நான் பார்த்திருக்கேன். நீங்க நிறைய படங்கள்ல நீங்க நடிக்கணும். வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோவுக்கான கேப்ஷனில், விவேக் சார் உங்களுக்கான மெசேஜ் இது. நடிகர்களிடம் நீங்கள் ஏற்படுத்திய தாக்கத்தை உணர்வீர்கள் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











