அடியே அழகே.. நிவேதா பெத்துராஜ் லாவெண்டர் கலரில் கண்ணை பறிக்கும் அட்டகாசமான போட்டோஷூட்!
சென்னை : நடிப்பில் தனக்கென ஒரு புது ரூட்டை அமைத்து வெற்றிகரமாக கலக்கி வரும் நடிகை நிவேதா பெத்துராஜ் சமீபகாலமாக போட்டோ ஷூட்டில் ரசிகர்களை கட்டி இழுத்து வருகிறார்.
அலா வைகுண்டபுரம்லோ திரைப்படத்திற்கு பிறகு தெலுங்கில் விராட்ட பருவம், பாகல் என அடுத்தடுத்த திரைப்படங்கள் ஒப்பந்தமாகியுள்ளார்.
படப்பிடிப்புக்கு இடையில் போட்டோ ஷூட்களில் கலக்கி வரும் நிவேதா இப்பொழுது லாவண்டர் காஸ்ட்யூமில் அம்சமான எடுத்த போட்டோக்கள் ரசிகர்களை பெரிதும் ஈர்த்து வைரலாகி வருகிறது.

கவர்ச்சி காட்டியுள்ளார்
மிகவும் கலகலப்பான காமெடி படங்களை இப்போதுள்ள தலைமுறைக்கு ஏற்றவாறு எடுக்கும் இயக்குனர் வெங்கட் பிரபு இப்பொழுது இளமைத் துள்ளலுடன் பார்ட்டி திரைப்படத்தை இயக்கியுள்ளார். மிகப் பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடிக்க உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தில் நிவேதா பெத்துராஜ் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சி காட்டியுள்ளார். ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை நிவேதா பெத்துராஜ் அதன்பிறகு அடுத்தடுத்து வாய்ப்புகள் வர வளர்ந்து வரும் நடிகைகளில் அனைவரது கவனத்தையும் பெற்றிருக்கிறார்.

இரண்டாம் கதாநாயகியாக
தமிழைப்போலவே தெலுங்கிலும் இவருக்கு மிகப் பெரிய மார்க்கெட் இருப்பதால் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் சிறு கதாபாத்திரம் என்றாலும் நடிக்க தயாராக இருக்கும் நிவேதா பெத்துராஜ் சமீபத்தில் உலக அளவில் பாக்ஸ் ஆபீசை கலக்கிய அலா வைகுண்டபுரம்லோ திரைப்படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்து அசத்தியிருப்பார்.

அதிகாரப்பூர்வ தெலுங்கு ரீமேக்
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்தில் போலீஸ் அதிகாரியாக வந்து கலக்கிய இவர், இப்பொழுது மீண்டும் போலீசாக தெலுங்கில் ரெட் திரைப்படத்தில் நடித்து மிரட்டி உள்ளார். இத்திரைப்படம் தமிழில் அருண் விஜய் நடிப்பில் வெளியான தடம் படத்தின் அதிகாரப்பூர்வ தெலுங்கு ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

வடித்து வைத்த சிலை போல
தமிழை விடவும் தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி வரும் நிவேதா பெத்துராஜ் விராட்ட பருவம், பாகல் மற்றும் பெயரிடப்படாத புதிய திரைப்படம் என வரிசை கட்டி படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வர மறுபுறம் போட்டோ ஷூட்டிலும் கலக்குகிறார். அந்த வகையில் இப்பொழுது லாவண்டர் கலரில் கண்ணைப் பறிக்கும் காஸ்ட்யூமில் வடித்து வைத்த சிலை போல அழகான தோரணையில் நின்றுகொண்டிருக்கும் நிவேதாவின் இந்த லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இப்பொழுது இணையதளத்தை கலக்கி வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











