தலையாட்டும் ஃப்ரெண்ட்ஸ் உங்க கிட்டயும் இருக்காங்களா.. நிவேதா பெத்துராஜ் கேள்வி!
சென்னை : நடிகை நிவேதா பெத்துராஜ்க்கு தமிழ்,தெலுங்கு என எக்கச்சக்கமான வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
அல்லு அர்ஜுன் நடிப்பில் சென்ற ஆண்டு வெளியாகி வசூல் சாதனை புரிந்த அலா வைகுண்டபுரம்லோ படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்து கலக்கி இருந்தார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் இப்பொழுது தலையாட்டி பொம்மையை வைத்துக் கொண்டு உங்களிடம் இதுபோன்று எல்லாத்துக்கும் ஆமா சொல்ற ஃப்ரெண்ட் இருக்காங்களா என்ற ருசிகரமான கேள்வியை கேட்டுள்ளார்.

குணசித்திர கதாபாத்திரங்களில்
ஹீரோயினாக மட்டுமல்லாமல் குணசித்திர கதாபாத்திரங்களில் நடிக்கும் நிவேதா பெத்துராஜ் முன்னணி நடிகர்கள் இளம் நடிகர்கள் என எந்த ஒரு பாகுபாடும் பார்க்காமல் கதையை மட்டும் தேர்ந்தெடுத்து அதில் தனது கதாபாத்திரத்தை பார்த்து மட்டுமே நடித்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இரண்டாம் கதாநாயகியாக
ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட இவர் அதைத் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் பட்டையை கிளப்புகிறார். அல்லு அர்ஜுன் படங்கள் என்றாலே தென்னிந்தியாவில் மட்டும் அல்லாமல் பாலிவுட்டில் கூட மிகப்பெரிய வரவேற்பு பெற்று வர சென்ற ஆண்டு வெளியான அலா வைகுண்டபுரம்லோ படம் உலக அளவில் பெரும் வரவேற்பு பெற்று மாபெரும் வெற்றி பெற்று வசூலை குவித்தது . இதில் இரண்டாம் கதாநாயகியாக நடிகை நிவேதா பெத்துராஜ் நடித்து கலக்கியிருந்தார்.

அட்டகாசமான டான்ஸ்
தமிழில் பொன்மாணிக்கவேல் மற்றும் பார்ட்டி ஆகிய படங்கள் நிவேதாவுக்கு வெளியாக இருக்க இதுவரை கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்த நிவேதா பார்ட்டி படத்தில் பிகினியில் வந்து அனைவரையும் வியக்க வைத்துள்ளார். இந்த படத்திலிருந்து ஒரு பாடல் ஏற்கனவே வெளியாகி இருக்க அதில் நிவேதா அரைகுறை ஆடையில் அட்டகாசமான டான்ஸ் ஆடி இருப்பார்.

தலையாட்டி பொம்மை
தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் பட்டைய கிளப்பி வரும் நிவேதாவுக்கு சமூக வலைதளங்களில் எக்கச்சக்கமான ரசிகர்கள் இருக்க கையில் இப்பொழுது ஒரு தலையாட்டி பொம்மையை வைத்துக் கொண்டு இதேபோல எல்லாத்துக்கும் ஆமா சொல்ற ஃப்ரெண்ட்ஸ் உங்க கிட்டயும் இருந்தா அவர்களை டாக் பண்ணுங்க என ருசிகரமான கேள்வியை கேட்டு பதிவிட்டுள்ளதற்கு ரசிகர்களும் சுவாரசியமான ரிப்ளை செய்து நண்பர்களை டேக் செய்துவருகின்றனர் .


Click it and Unblock the Notifications











