29வது பிறந்தநாளை கொண்டாடும் நிவேதா பெத்துராஜ்.. பெயரை பச்சை குத்தி நெகிழ்வித்த ரசிகர்!

சென்னை: 2016ஆம் ஆண்டு வெளியான ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான நடிகை நிவேதா பெத்துராஜ் இன்று இவர் தனது 29வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

தமிழ் சினிமாவிற்கு வந்த கொஞ்ச நாட்களில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார். குறிப்பாக இள வட்டங்களின் மத்தியில் பாப்புலர் ஆனார் நிவி.

தமிழில் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் சில படங்களை நடித்து பிரபலமானார் நிவேதா பெத்துராஜ்.

நிவேதா பெத்துராஜ் நெகிழ்ச்சி

நிவேதா பெத்துராஜ் நெகிழ்ச்சி

பாண்டிச்சேரியில் தெலுங்கு படம் ஒன்றின் படப்பிடிப்புக்காக வந்து இருந்த நிவேதா பெத்துராஜ்-ஐ அவரின் தீவிர ரசிகர் பிரபு என்பவர் சந்தித்து "நிவேதா பெத்துராஜ்" என்று தன் கையில் பச்சை குத்தி இருப்பதை காட்டி நிவேதாவை நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார். பின்பு அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

நிவியின் பயணம்

நிவியின் பயணம்

ஒரு நாள் கூத்து படத்தில் அறிமுகமாகி பின்பு உதயநிதி ஸ்டாலினுடன் பொதுவாக என் மனசு தங்கம் படத்தில் நடித்தார். பின்பு ஜெயம் ரவியுடன் டிக் டிக் டிக் படத்திலும், விஷ்ணு விஷாலுடன் ஜக ஜால கில்லாடி படத்திலும் நடித்தார்.
அதன் பிறகு விஜய் ஆண்டனியுடன் திமிரு பிடிச்சவன் படத்திலும், விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன் படத்திலும் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

கலக்கும் நிவி

கலக்கும் நிவி

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தெலுங்கில் வெளியான மென்டல் மனதிலோ, சித்ராலஹரி, ப்ரோசேவாரேரூரா, அல வைகுந்தபுரமலோ படத்தின் மூலம் பிரபலமானார். தமிழில் வெளியான தடம் படத்தின் ரீமேக்கான ரெட் படத்தில் நடித்துள்ளார் நிவி என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

தமிழில் பொன் மாணிக்க வேல், பார்ட்டி ஆகிய படங்களும்
தெலுங்கில் ரெட் படமும் வெளிவர உள்ளது. கொரோனாவால் வெளிவராமல் இருக்கும் இந்த படங்கள் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

ட்விட்டரில் ரசிகர்கள் கொண்டாட்டம்

ட்விட்டரில் ரசிகர்கள் கொண்டாட்டம்

#HBDNivethaPethuraj என்னும் #tag போட்டு Common DP வெளியிட்டு ரசிகர்கள் ட்விட்டரில் தனது அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X