உங்க ஐ.டி விங்கை கட்டுப்படுத்த முடியலனா.. நீங்க எல்லாம் என்ன தலைவர்? நிவேதா பெத்துராஜ் விளாசல்
சென்னை: நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழ் சினிமா உலகிலேயே கணிசமான படங்களில் நடித்து தனக்கென தனி அங்கீகாரத்தை ரசிகர்கள் மத்தியில் பெற்றவர். அவர் வளர்ந்து எல்லாம் துபாயில் தான் என்றாலும் தமிழ் மற்றும் தமிழ் சினிமா மீது இருந்த ஆர்வத்தால் நடிகையாக உருவெடுத்தார். அதே நேரத்தில் நடிகை நிவேதா பெத்துராஜ், சமூகத்தில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்து தனது கருத்தை தெரிவிப்பார். இப்படி இருக்கையில் நடிகை நிவேதா பெத்துராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் சமீபத்தில் பதிவிட்டுள்ளது பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.
அதாவது, " உங்கள் தகவல் தொழில்நுட்பப் பிரிவு வெறுப்பு, தவறான தகவல் மற்றும் தனிப்பட்ட தாக்குதல்களை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருந்தால், அதைத் தடுக்க வேண்டிய பொறுப்பு தலைவரான உங்களுடையது. தலைமை என்பது எப்போதும் பாரபட்சமானது அல்ல. தேர்தல் நெருங்கி வரும் கால கட்டத்தில் இப்படி மோசமாக நடந்து கொள்வது என்பது உங்கள் கட்சிக்குத்தான் கெட்டப் பெயர்" என்று பதிவிட்டுள்ளார்.
இவரது இந்த பதிவு இப்போது எதற்காக என்ற கேள்வி பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒரு புறம் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்தவர்களோ, நிவேதா பெத்துராஜின் இந்த போஸ்ட் திமுக ஐ.டி. விங்கிற்கு எதிரானது என்றும், அதற்கு காரணம் இதுதான் என்று, ஆங்கில செய்தி நிறுவனத்தில் வெளிவந்த ஒரு செய்தியை அதிகம் பகிர்ந்து வருகிறார்கள்.

தவெக காரணமா?: அதே நேரத்தில் நெட்டிசன்கள் பலரும் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் விர்ச்சுவல் வாரியர்ஸ் சமூக வலைதளங்களில் தொடர்ந்து மோசமாகவே நடந்து வருகிறார்கள். அதைத்தான் இவர் குறிப்பிட்டுள்ளார் என்றும் பதிவிட்டு வருகிறார்கள். மொத்தத்தில் நிவேதா பெத்துராஜின் போஸ்ட் அரசியல் தளத்தில் கவனத்தை ஈர்த்தது மட்டுமல்லாமல் பேசு பொருளாகவும் மாறியுள்ளது.
காதல்: நடிகை நிவேதா பெத்துராஜ் சமீபத்தில் தொழிலதிபர் ஒருவருடன் காதலில் இருப்பதாகவும் அவரையே திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் அறிவித்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தனது காதலர் ரஜித் இப்ராஹிம்மை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். ரஜித் இப்ராஹிமும் துபாயில் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவர்.
காதல் பிரிவு?: இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென தனது காதலரின் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கியது மட்டுமல்லாமல் அவரை அன்ஃபாலோ செய்தார். அவரது இந்த செயல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. ஆனால் இது தொடர்பாக நிவேதா எந்த விளக்கமும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











