“நீங்க வெர்ஜினா..?” அநாகரீகமாக கேள்வி கேட்ட நெட்டிசன்ஸ்.. சரியான பதிலடி தந்த ரஜினி, கமல் மகள்!
அத்துமீறிய கேள்வி கேட்ட கெட்ட எண்ணம் கொண்ட நெட்டிசன்களுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார் நடிகை நிவேதா தாமஸ்.
சென்னை: தன்னிடம் அத்துமீறி கேள்விக்கேட்ட நெட்டிசன்களுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார் நடிகை நிவேதா தாமஸ்.
பாபநாசம் படத்தில் கமலின் மூத்த மகளாக நடித்தவர் நிவேதா தாமஸ். தற்போது ரஜினியின் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இதில் ரஜினியின் மகளாக அவர் நடித்து வருகிறார்.
நிவேதா தாமஸ் ரசிகர்களுடன் உரையாடுவதற்காக ஆன்லைன் நேரலையில் சமீபத்தில் வந்தார். அப்போது சில நெட்டிசன்கள் அவரிடன் அத்துமீறி கேள்வி கேட்டனர். அந்த கேள்விகளுக்கு நிவேதா பதில் அளிக்கவில்லை. நல்ல கேள்விகளுக்கு மட்டுமே பதிலளித்தார்.

இன்ஸ்டா பதிவு
இந்நிலையில், நேரலை முடிந்த பிறகு இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவிட்டுள்ளார் நிவேதா. அதில், "உங்களுடைய நேரத்தை என்னிடம் பேசுவதற்காக செலவழித்த அனைவருக்கும் நன்றி. சில வேடிக்கையான கேள்விகளுக்கு பதிலளித்தது ஜாலியாக இருந்ததது.

அத்துமீறிய கேள்விகள்
அதே நேரம், எப்போது கல்யாணம், ... பற்றி ஒருவார்த்தை சொல்லுங்கள், பாய் பிரெண்ட்ஸ் இருக்கிறார்களா, என்னைக் கல்யாணம் செய்து கொள்கிறீர்களா, நீங்கள் வெர்ஜினா? என்பது போன்ற கேள்விகளுக்கு நான் பதிலளிக்கவில்லை.

மரியாதை கொடுங்கள்
முதலில் நீங்கள் ஒரு சக மனுஷியிடம் பேசுகிறீர்கள் என்பதை புரிந்துகொண்டு பேசுங்கள். கொஞ்சம் மரியாதையையும், கண்ணியத்தையும் கொடுங்கள். மற்றப்படி உங்களின் நேரத்தை எனக்காக செலவழித்தற்காக நன்றி. விரைவில் மீண்டும் சந்திக்கலாம்", என குறிப்பிட்டுள்ளார்.

சரியான பதிலடி
நீங்கள் வெர்ஜினா என்பது உள்ளிட்ட அத்துமீறிய கேள்விகளை புறந்தள்ளி, கெட்ட எண்ணம் கொண்ட நபர்களுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார் நிவேதா தாமஸ். சமீபகாலமாக சமூக வலைதளங்களில் சிலர் அத்துமீறி செயல்படுவது அதிகரித்து வருகிறது. அவர்களைப் போன்றவர்களுக்கு எதிராக நிவேதா, ராஷ்மிகா போன்றோர் தைரியமாக குரல் கொடுத்திருப்பது வரவேற்க வேண்டிய செயல்பாடாகும்.


Click it and Unblock the Notifications











