“பார்ட்டினா எப்டி என்ஜாய் செய்யணும் தெரியுமா”.. விஜய் பட நடிகை சொல்லும் டிப்ஸ்!
Recommended Video

பார்ட்டினா இப்படி பண்ணனும்- விஜய் நடிகை வைரல் குத்தாட்டம் வீடியோ
சென்னை: நடிகை நிவேதா தாமஸ் கல்யாண வீட்டில் டான்ஸ் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.
பாபநாசம் படத்தில் கமலின் மகளாக நடித்திருந்தவர் நிவேதா தாமஸ். அதனைத் தொடர்ந்து விஜய்யின் தங்கையாக ஜில்லா படத்தில் நடித்தார். தற்போது நாயகியாக சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பதிவேற்றம் செய்துள்ளார். அதில் அவர் திருமண வீட்டில் ஆடும் காட்சிகள் உள்ளன.
பிரபுதேவாவின் குலேபகாவலி படத்தில் இடம்பெற்ற குலேபா பாடலுக்கு அவர் நடனமாடியுள்ளார். அவருடன் மேலும் இரண்டு இளைஞர்களும் நடனம் ஆடுகின்றனர். இந்தப் பாடலுக்கு அவர் வெறும் காலில் நடனமாடியுள்ளார்.
நிவேதாவின் அதிரடி நடனத்தைப் பார்த்த ரசிகர்கள், சூப்பர் என அவரைப் பாராட்டி வருகின்றனர். இந்த வீடியோவை இதுவரை ஒன்பது லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர்.
Comments


Click it and Unblock the Notifications