தர்பார் படத்துக்கு அப்புறம் நிவேதா தாமஸ் எடுக்கவுள்ள போல்ட் ஸ்டெப் என்ன தெரியுமா?
சென்னை: தமிழ், தெலுங்கு மொழிகளில் பிசியாக நடித்து வரும் நிவேதா தாமஸ் பிங்க் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தாமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் படத்தில் ரஜினிக்கு மகளாக நடித்துள்ள நிவேதா தாமஸ் அந்த படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார்.
இந்நிலையில், பவன் கல்யாண் நடிப்பில் தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ள பிங்க் படத்தில் படு போல்டாக நிவேதா தாமஸ் நடிக்கவுள்ளாராம்.

தமிழில்
சரஸ்வதி சபதம் படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடித்த நிவேதா தாமஸ், பாபநாசம் படத்தில் கமல்ஹாசனுக்கு மகளாக நடித்திருந்தார். மேலும், ஜில்லா படத்தில் விஜய்க்கு தங்கையாகவும் நடித்துள்ளார். இந்நிலையில், தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு மகளாக தர்பார் படத்திலும் நிவேதா நடித்துள்ளார். தர்பார் படத்தில் ரஜினியின் பெயர் ஆதித்யா அருணாச்சலம் என்பதையும் முதலில் இவர் தான் தனது ட்வீட் மூலம் ரிவீல் செய்தார்.

டோலிவுட்டில்
தமிழில் அறிமுகமான நிவேதா தாமஸ் தெலுங்கில் முன்னணி இளம் நாயகியாக வலம் வருகிறார். நானியின் நின்னுகோரி, ஜெண்டில்மேன் ஜூனியர் என்.டி.ஆரின் ஜெய் லவ குசா போன்ற பல சூப்பர் ஹிட் படங்களிலும் நிவேதா தாமஸ் நடித்துள்ளார்.

பிங்க் ரீமேக்
பாலிவுட்டில் அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியான பிங்க் திரைப்படம் தமிழில் அஜித், வித்யாபாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தை தெலுங்கில் பவன் கல்யாண் ரீமேக் செய்து நடிக்கவுள்ளார்.

என்ன ரோல்
பிங்க் படத்தில் டாப்ஸி நடித்த போல்ட்டான கதாபாத்திரத்தில் தான் தெலுங்கில் நிவேதா தாமஸ் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிங்க் படத்தின் ரீமேக் நிச்சயம் நிவேதா தாமஸ்க்கு இன்னொரு மைல்கல்லாக இருக்கும்.


Click it and Unblock the Notifications











