விபத்தில் கால் முறிந்ததாக தீயா பரவிய வதந்தி.. பதறிப்போய் டிவிட்டிய நடிகை!
ஹைதராபாத்: விபத்தில் கால் முறிந்ததாக பரவிய வதந்தியால் பதறிப்போயுள்ளார் நடிகை அனுஷ்கா.
நடிகை அனுஷ்கா தமிழ், தெலுங்கு திரைத்துறையில் முன்னணி ஹீரோயினாக உள்ளார். இரு மொழிகளிலும் அவர் நடித்துள்ள பல படங்கள் பெரும் வெற்றி பெற்றுள்ளன.
படத்திற்காக எப்படிப்பட்ட ரிஸ்க்கையும் எடுக்க தயங்கமாட்டார் என்பது இவர் நடித்த படங்களிலேயே தெரியும். இஞ்சி இடுப்பழகி படத்திற்காக குண்டான எடையை குறைக்க பெரும் சிரமப்பட்டார்.

ரைசா நரசிம்ம ரெட்டி
இதனால் பட வாய்ப்புகள் குறைந்ததால் வெளிநாட்டில் சிகிச்சை பெற்று எடையை குறைத்தார். இந்நிலையில் அனுஷ்கா, அமிதாப்பச்சன், சிரஞ்சீவியுடன் ரைசா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்து வருகிறார்.

காலில் எலும்பு முறிவு
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது அனுஷ்கா கீழே விழுந்ததில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக தகவல் பரவியது. இதைத்தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அனுஷ்காவை நலம் விசாரித்து வருகின்றனர்.
நலமாக இருக்கிறேன்
இந்நிலையில் தனக்கு எதுவும் ஆகவில்லை என்றும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் அனுஷ்கா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அது ஒரு வதந்தி
இதுதொடர்பாக வாட்ஸ்அப் பதிவு ஒன்றையும் அனுஷ்கா ஷெட்டி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் தனக்கு விபத்து ஏற்பட்டதாக தகவல் பரவி வருகிறது. அது ஒரு வதந்தி என அவர் கூறியுள்ளார். அனுஷ்கா ஷெட்டிக்கு விபத்து ஏற்படவில்லை என்ற செய்தி அவரது ரசிகர்களை நிம்மதியடையச் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











