நடிப்பதில் மகிழ்ச்சியடைந்தால் போதும், கனவு கதாபாத்திரம் இல்லை: ஸ்ரேயா
Recommended Video

சென்னை: தனக்கென லட்சியக் கதாபாத்திரம் எதுவும் இல்லை என நடிகை ஸ்ரேயா தெரிவித்துள்ளார்.
தமிழ் தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரேயா தற்போது அதிக படங்களில் நடிப்பதில்லை. அடுத்ததாக இந்தியில் தட்கா என்ற படமும், தெலுங்கில் வீரபோக வசந்த ராயலு என்ற திரைப்படமும் தயாராக உள்ளது.

அழகு, நடிப்புத் திறமை எல்லாம் இருந்தாலும், இவர் நடித்த பல படங்கள் மிகப்பெரிய வெற்றியடையாததால் ராசியில்லாத நடிகை என அழைக்கப்பட்டார். நீண்ட நாட்களாக காதலித்து வந்த ரஷ்ய காதலன் ஆன்ட்ரே கோஸ்ச்சீவ்வை திருமணம் செய்துகொண்டார்.
தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் நரகாசூரன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் தொடர்பாக பேட்டியளித்துள்ள அவர், தனக்கென எந்த லட்சியக் கதாபாத்திரமும் கிடையாது. இதை நடிக்க வேண்டும், நடிக்கக் கூடாது எதுவும் இல்லை எனக் கூறியுள்ளார்.
ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என ஒப்பந்தமாகி, அதில் நடிக்கும்போது அதிலிருந்து சில விஷயங்கள் கற்றுக் கொள்வோம். அது மனதுக்கு நெருக்கமாக இருக்கும். அந்த மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டும். அதுபோன்ற கதாப்பாதிரங்களைச் செய்ய வேண்டுமென்று தான் ஆசைப்படுகிறேன். வாழ்நாளில் இந்த குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துவிட வேண்டும் என எந்த குறிக்கோளும் இல்லை என தெரிவித்துள்ளார்.
நரகாசூரன் படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஊட்டியில் படமாக்கப்பட்டது. எனக்கு ஊட்டி போன்ற மலைப்பகுதி மிகவும் பிடிக்கும். இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு இருந்த ஊட்டியும், பிறகு இருக்கும் ஊட்டியும் வெவ்வேறானவை எனக் கூறியுள்ளார்.
இப்படத்தில் அரவிந்த் சாமி, ஸ்ரேயா, இந்திரஜித் சுகுமாரன், சந்தீப் கிஷன் மற்றும் பலர் நடித்துள்ளனர். விரைவில் திரைக்கு வர உள்ளது.


Click it and Unblock the Notifications











