தயக்கம் போயிடுச்சி!-கீர்த்தி சாவ்லா

கீர்த்தி சாவ்லா நாயகியாக நடித்த ஸ்வேதா என்ற படம் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் கற்பழிப்புக் காட்சி ஒன்றில் நடித்துள்ளார் கீர்த்தி சாவ்லா. இந்தக் காட்சியை இப்போது இணையதளத்தில் பரப்பி வருகிறார்கள் சிலர். பப்ளிசிட்டி இல்லாத படத்துக்கு இது மிக உதவியாக இருப்பது தெரிந்ததும், உற்சாகமாக அது தொடர்பான செய்திகளைப் பரப்பி வருகிறார் தயாரிப்பாளரும்.
இதுபற்றி கீர்த்தி சாவ்லா கூறுகையில், "படத்தின் கதையே அந்த காட்சியில் இருந்ததால்தான், கற்பழிப்பு காட்சியில் நடிக்க நான் சம்மதித்தேன். அந்த காட்சியை இரண்டு நாட்கள் படமாக்கினார்கள். பயப்படும்படியாக எதுவும் நடக்கவில்லை. அதனால் துணிச்சலுடன் அந்த காட்சியில் நடித்தேன். ஆனால், படம் வெளிவந்து இரண்டு நாட்கள் ஆவதற்குள், நான் நடித்த கற்பழிப்பு காட்சிகளை 'நெட்'டில் பரவவிட்டது, மன்னிக்க முடியாத குற்றம்..." என்றார்.
"தொடர்ந்து இதுபோன்ற கற்பழிப்பு காட்சியில் நடிப்பீர்களா?"
"ஒருமுறை நடித்து விட்டதால், எனக்கு பயம் போய்விட்டது. அதனால், கதைக்கு அவசியமாக இருந்தால், கற்பழிப்பு காட்சியில் நடிப்பதில் எனக்கு எந்த தயக்கமே இல்லை" என்றார்.


Click it and Unblock the Notifications











