எதிர்காலத்தில் என் திருமணம்....? : அதிர்ச்சி கொடுக்கும் நயன்தாரா
ஐதராபாத்: திருமணத்தைப் பற்றி நான் யோசிக்கவில்லை என்று ஐதராபாத்தில் நயன்தாரா அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்
நயன்தாரா தமிழ், தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். காதல் தோல்வி ஏமாற்றங்களில் இருந்தும் மீண்டு விட்ட அவர் படப்பிடிப்பில் எல்லோருடனும் கலகலப்பாக பேசி சகஜமாக பழகுகிறாராம்.

திடீர் பேட்டி...
சமீபத்தில் ஐதராபாத்தில் நயன்தாரா திடீரென்று அளித்த பேட்டியில் திருமணத்தைப் பற்றி நான் யோசிக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.

எதிர் காலம்....
எதிர் காலம் என்பது நம்கையில் இல்லை. கடவுள் கையில் இருக்கிறது. கடவுள் நினைக்கிற படிதான் எல்லாம் நடக்கும்.

திருமணம்... நோ ஐடியா!!
திருமணத்தை பற்றி நான் யோசிக்கவே இல்லை. என் வாழ்க்கையில் எதிர்பாராதவை நிறைய நடந்துவிட்டன.

வந்ததும்... சென்றதும்...
எது எப்போது வரவேண்டுமோ அதெல்லாம் அவ்வப்போது வந்து போய்விட்டன. எதிர்காலம் என்ன என்பதை நான் சிந்திக்கவில்லை' என நயன்தாரா கூறியிருக்கிறார்.
Comments


Click it and Unblock the Notifications