twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வைரமுத்து 13+.. அனு மாலிக் 6+.. மகளிர் தினம் ஒண்ணு தான் குறைச்சல்.. பாடகி சின்மயி பொளேர்!

    |

    சென்னை: வரும் மார்ச் 8ம் தேதி மகளிர் தினம் கொண்டாட உள்ள நிலையில், நாட்டில் பெண்களுக்கான நீதியே கிடைப்பதில்லை, இதில் மகளிர் தினத்தை மட்டும் மறக்காமல் கொண்டாடுகிறோம் என பாடகி சின்மயி விளாசி உள்ளார்.

    பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறி, பரபரப்பை கிளப்பிய சின்மயி, டப்பிங் யூனியனில் இருந்து நடிகர் ராதாரவியால் நீக்கப் பட்டதை எதிர்த்தும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

    இந்நிலையில், தற்போது, சின்மயி பதிவிட்டுள்ள ட்வீட், மீண்டும் கோலிவுட்டில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    90 பெண்கள்

    90 பெண்கள்

    மீடூ இயக்கத்தால் ஒன்றிணைந்து 90க்கும் மேற்பட்ட பெண்கள் தொடர்ந்து கொடுத்த பாலியல் புகார்களின் அடிப்படையில், தற்போது, பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் குற்றவாளி என நிரூபிக்கப் பட்டுள்ளார். பெண்களுக்கான நியாயம் கிடைக்க எப்படி போராட வேண்டி இருக்கு என நெட்டிசன் ஒருவர் போட்ட பதிவை சுட்டிக் காட்டி விளாசி உள்ளார் சின்மயி.

    வைரமுத்து 13+

    அந்த ட்வீட்டின் ஸ்க்ரீன் ஷாட்டை பதிவிட்ட பாடகி சின்மயி, இது என்ன பிரமாதம், பாடலாசிரியர் வைரமுத்து மீது 13க்கும் மேற்பட்ட பெண்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். பாலியல் புகார் கொடுக்கும் பெண்களை டப்பிங் யூனியனில் இருந்து வெளியேற்றும் வேலையை ராதாரவி பிரமாதமாக செய்கிறார் என தனது ட்வீட்டில் வெளுத்துள்ளார்.

    பெரிய லிஸ்ட்

    மேலும், பாலிவுட் இசையமைப்பாளர் அனு மாலிக் பொது இடத்தில் ஆறுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பாடகர் கார்த்தி, சுவிட்சர்லாந்து பாடகியுடன் சேர்த்து 7 பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். கைலாஷ் கெர், ரகு தீக்‌ஷித் என பெரிய லிஸ்டையே அடுக்கியுள்ளார்.

    பெண்களுக்கு நீதி இல்லை

    நம் நாட்டில் மகளிர் தினத்தன்று பெண்களை போற்றும் நிலை இருக்கிறதே தவிர, மற்ற நாட்களில், அவர்களை மதிக்கக் கூட தெரியாத மனநிலையில் தான் பல மிருகங்கள் வாழ்கின்றனர். பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி படுத்த நடவடிக்கை எடுக்காமல், மகளிர் தினம் கொண்டாடி என்ன பயன் என்ற நோக்கில் வரிசையாக குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார் சின்மயி.

    Recommended Video

    Chinmayi Dubbing Union Press Meet 2020 | Radha Ravi
    மகளிர் தினம்

    மகளிர் தினம்

    ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி மகளிர் தினமும் மார்ச் முதல் வாரத்தை மகளிர் தின வாரமாகவும் கொண்டாடி வருகின்றனர். உலகளவில் பெண்களுக்கு பாலியல் ரீதியாக பணியிடங்கள், பொது இடங்கள் என சமூகத்தில் தொடர்ந்து பல பிரச்சனைகள் எழுந்து வருகின்றன. மகளிர் தினத்தை கொண்டாடுவது மட்டும் முக்கியமல்ல பெண்களை மதிக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும்.

    English summary
    Chinmayi slams Women’s Day celebration, without giving safety and justice to Women. She also gave a abusers list in her tweet.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X