நான் ஏன் புதுப்படங்களில் நடிக்கலை: கனத்த இதயத்துடன் சமந்தா விளக்கம்
சென்னை: தென்னிந்திய சினிமாவில் ஹீரோயின்களுக்கு அர்த்தமுள்ள கதாபாத்திரம் இல்லாததால் தான் புதிய படங்களில் நடிக்கவில்லை என்று சமந்தா தெரிவித்துள்ளார்.
கோலிவுட், டோலிவுட் படங்களில் நடித்து வருபவர் சமந்தா. அவர் ஜூனியர் என்.டி.ஆருடன் சேர்ந்து நடித்த ஜனதா கராஜ் அண்மையில் ரிலீஸாகி ஹிட்டானது. தமிழிலும் அவர் நடிப்பில் வெளியான தெறி ஹிட்டானது.
இந்நிலையில் சமந்தா கையில் தற்போது ஒரு புதுப்படம் கூட இல்லை.

சமந்தா
சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து வருகிறார். அவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகப் போவதால் புதிய படங்களில் நடிக்க மறுக்கிறார் என்று முதலில் கூறப்பட்டது.
மாற்றம்
தென்னிந்திய சினிமாவில் ஒரு ஹீரோயினுக்கு அர்த்தமுள்ள கதாபாத்திரம் கிடைப்பது எவ்வளவு கடினம் என்பதை தற்போது தான் உணர்கிறேன். மாற்றத்திற்கான நேரம் என சமந்தா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
படங்கள்
நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்காததால் புதுப்படங்களில் நடிக்க நான் ஒப்புக்கொள்ளவில்லை. இதை கூற இதயம் கனக்கிறது என ட்வீட்டியுள்ளார் சமந்தா.

நாக சைதன்யா
நாக சைதன்யா வீட்டில் சமந்தாவை மருமகளாக ஏற்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சைதன்யா இருக்க அவரது தம்பி அகிலுக்கு நிச்சயதார்த்த தேதியை அறிவித்துள்ளார் நடிகர் நாகர்ஜுனா என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











