twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஸ்கூல்கேர்ள் கேரக்டரா கொடுத்து கடுப்பேத்தறாங்க மைலாட்: சரண்யாநாக் கவலை

    |

    சென்னை: 'காதல்' படத்தில் அறிமுகமானவர் சரண்யா நாக். 'இன்னும் ஸ்கூல் கேர்ள் கேரக்டரோடயே வராதீகப்பா, என்னைக் கொஞ்சம் காலேஜூக்கு முன்னேற்றுங்கள் டைரக்டர்ஸ்..' என சிரித்தபடி கூறுகிறார் இவர்.

    'உங்க போதைக்கு நாங்க ஊறுகாயா..?' என ஒற்றை டயலாக் மூலமே பேமசானவர் சரண்யா. படத்தில் சில காட்சிகளே வந்தாலும், கனமான கதாபாத்திரம். அடுத்தடுத்து ஹீரோயின் வாய்ப்புகள் வந்து கதவைத் தட்ட கொஞ்சம் குடும்பச் சிக்கலில் சிக்கினார்.

    அடுத்து வாய்த்த பேராண்மையும் ஐந்து நாயகிகளில் ஒருத்தி கதை தான். ஆனால், ஒரு வழியாக தற்போது கதாநாயகியாக இரண்டொரு படங்களில் நடித்து வருகிறார். தனது நடிப்புத் திறமைக்கு தீனி போடுமாறு நல்ல கதாபாத்திரங்களைத் தேடி வரும் இவர், அது குறித்து தெரிவித்திருப்பதாவது...

    தயங்கினேன்... ஆனால், ஜெயித்தேன்

    தயங்கினேன்... ஆனால், ஜெயித்தேன்

    2004ல் வந்த காதல் படத்தில் நடிக்கும் போது, ஸ்கூல் பொண்ணு வேஷமா என மொதல்ல கொஞ்சம் தயங்கினேன். ஆனால், சில காட்சிகளை எடுத்து, போட்டுக் காட்டினார் டைரக்டர். அதைப்பார்த்து, எனக்கும் டைரக்டருக்கும் திருப்தி ஏற்படவே மேற்கொண்டு அப்படத்தில் நடிக்கச் சம்மதித்தேன்.

    நா காலேஜ் போகனும்...

    நா காலேஜ் போகனும்...

    ஆனால் அதைத் தொடர்ந்து ஸ்கூல் கேர்ள் கேரக்டருக்காகவே என்னை அணுகத் தொடங்கினார்கள் சிலர். ப்ளீஸ் என்ன எப்போ காலேஜூக்கு அனுப்புவீங்க டைரக்டர்ஸ்...

    காட்டிற்குள் ஷூட்டிங்...

    காட்டிற்குள் ஷூட்டிங்...

    பேராண்மை படம் வித்தியாசமானது. அதில் நடித்தது நல்ல அனுபவம் எனக்கு. அதில் காலேஜ் செல்லும் பெண் போன்ற வேடமென்றாலும் காட்டிற்குள் நடக்கும் கதை வித்தியாசமாக அமைந்திருந்தது.

    வித்தியாசமான கேரக்டர்கள்...

    வித்தியாசமான கேரக்டர்கள்...

    அதற்கு அடுத்ததாக மழைக்காலம் படத்தில் நடித்திருக்கிறேன். தற்போது நடித்து வரும் ரெட்டை வாலு, ஈரவெயில் இரண்டுமே வித்தியாசமான கதைகள்.

    வெற்றி நிச்சயம்....

    வெற்றி நிச்சயம்....

    நான் எப்படிப்பட்ட கதைகளில் நடிக்க வேண்டும் என விரும்பினேனோ அதற்கேற்ப அமைந்த படங்கள் தான் இவை இரண்டும். இது போன்ற படங்கள் என்னை நான் சரியாக திரைத்துறையில் நிலை நிறுத்திக் கொள்வதற்கு உதவுகின்றன எனத் தெரிவித்துள்ளார் சரண்யா.

    English summary
    In 2004, when Saranya Nag was still in school, she played a school girl in Kaadhal. And now, in her upcoming film Retta Vaalu, she plays a school girl, yet again.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X