க்யூட் போஸ் கொடுப்பதில் ரஷ்மிகாவை மிஞ்ச யாரும் இல்லை.... க்யூட்னஸ் ஓவர்லோடெட் புகைப்படங்கள்!

சென்னை: இதுவரை தென்னிந்திய அளவில் கலக்கிக் கொண்டிருந்த நடிகையை ரஷ்மிகா மந்தன்னா இப்பொழுது பாலிவுட்டிலும் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி பட்டையை கிளப்புகிறார்

சித்தார்த் மல்கோத்ரா நடிப்பில் ஆக்ஷன் கதைகளில் உருவாகிவரும் மிஷன் மஞ்சுவை தொடர்ந்து அமிதாப்பச்சனுக்கு மகளாக குட் பாய் என்ற படத்திலும் நடித்து வருகிறார்

க்யூட் குயினாக இருந்து இப்பொழுது ஹாட் குயினாக மாறி சமூக வலைதளத்தை மிரட்டி வரும் ரஷ்மிகா மந்தனா இப்பொழுது பதிவிட்டுள்ள க்யூட் ஹாட் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரல் ஆகின்றன

 தமிழில் நேரடியாக

தமிழில் நேரடியாக

விஜய் தேவர்கொண்டா உடன் ரஷ்மிகா மந்தனா இணைந்து நடித்த டியர் காம்ரேட் மற்றும் கீதாகோவிந்தம் உள்ளிட்ட திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது தென்னிந்திய ரசிகர்களின் கனவு கன்னியாக மாறிய ரஷ்மிகா தமிழில் எப்போது நேரடியாக அறிமுகமாவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் இருந்தது.

 கிராமத்துப் பெண்ணாக

கிராமத்துப் பெண்ணாக

இந்த நிலையில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் மிக பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான சுல்தான் திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான ரஷ்மிகாவுக்கு இந்த படம் மற்றுமொரு வெற்றிப் படமாக அமைந்தது நடிகர் கார்த்தியின் நடிப்பில் வெளியான சுல்தான் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகி பட்டையை கிளப்பியது. விவசாயத்தைப் பற்றி மிக அழுத்தமாக கூடியிருந்த இந்த படத்தில் கிராமத்துப் பெண்ணாக ரஷ்மிகா மந்தனா மிக அழகாகவே நடித்து செமையாக ஸ்கோர் செய்து இருப்பார்.

 ஆரம்பமே அமர்க்களமாக பாலிவுட்டில்

ஆரம்பமே அமர்க்களமாக பாலிவுட்டில்

தென் இந்தியா ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்த இவர் இப்பொழுது இந்தியாவில் நேஷ்னல் க்ரஷ் என கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில் இவருக்கு பாலிவுட்டில் இருந்தும் பட வாய்ப்புகள் குவிகிறது ஆரம்பமே அமர்க்களமாக நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா நடிப்பில் உருவாகிவரும் மிஷன் மஞ்சு என்ற படத்தில் நடித்து வருகிறார்.

 உண்மை சம்பவங்களின் அடிப்படையில்

உண்மை சம்பவங்களின் அடிப்படையில்

இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது இந்திய ராணுவ துறையில் நடைபெற்ற உளவுத்துறை போரை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் இந்த படம் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு மகளாக குட் பாய் என்ற படத்தில் நடித்து வருகிறார். தந்தை மகள் இடையேயான பாசத்தை மையப்படுத்திய படமாக குட் பாய் தயாராகிவருகிறது

 க்யூட் கலந்த ஹாட்

க்யூட் கலந்த ஹாட்

இதுவரை தனது க்யூட்டான அழகின் மூலம் ரசிகர்களை கவர்ந்த ரஷ்மிகா மந்தனா இப்பொழுது ஹாட் குயினாக மாறி கவர்ச்சியை தாறுமாறாக காட்டி வருகிறார். அந்த வகையில் இவருடைய சமூக வலைதளங்களில் பதிவிடும் ஹாட் புகைப்படங்கள் தொடர்ந்து வைரலாகி வருகிறது. அந்த வகையில் இப்போது பதிவிட்டுள்ள க்யூட் கலந்த செம ஹாட்டான புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகிறது இதனைப் பார்த்த ரசிகர்கள் க்யூட் போஸ் கொடுப்பதில் ரஷ்மிகா வை மிஞ்ச யாரும் இல்லை என வர்ணித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X