பேன்ட் அணியாமல்.. ஷர்ட்டுடன் போஸ் கொடுத்த காந்த கண்ணழகி… கண்டபடி கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

சென்னை: தென்னிந்திய நடிகையான அனு இம்மானுவேல் பேன்ட் ஏதும் அணியாமல், வெறும் சட்டை மட்டுமே அணிந்தபடி கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

23 வயதாகும் இளம் நடிகையான இவர், அமெரிக்காவின் சிக்காகோவில் பிறந்தவர்.
மலையாள திரையுலகில் அறிமுகமான இவர், தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து தென்னிந்திய நடிகையாக வலம் வருகிறார்.

சிவகார்த்திகேயன் பார்ட்னர்

சிவகார்த்திகேயன் பார்ட்னர்

மிஷ்கின் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் படத்தில் நாயகியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் அனு இம்மானுவேல். கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பார்ட்னராக வைரலானார்.

ஹாட் லுக்

ஹாட் லுக்

ஸ்வப்ன சஞ்சரி படத்தில் அறிமுகமானாலும், நிவின் பாலியின் ஆக்‌ஷன் ஹீரோ பிஜுவில் தான் நாயகியாக அறிமுகமானார். தெலுங்கில், மஜ்னு, நா பேரு சூர்யா, கீதா கோவிந்தம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர், இன்ஸ்டாகிராமில் மற்ற நடிகைகளுக்கு போட்டியாக படு கவர்ச்சியான போட்டோக்களை பதிவிட்டு இளைஞர்களை காந்த கண்களால் ஈர்த்து வருகிறார்.

பிளாக் அண்ட் ஒயிட் சேலஞ்ச்

பிளாக் அண்ட் ஒயிட் சேலஞ்ச்

பெண்களுக்கு பெண்கள் துணை நிற்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஹாலிவுட் முதல் கோலிவுட் வரையில் உள்ள பல பிரபல நடிகைகள் கருப்பு வெள்ளை புகைப்படங்களை பதிவிட்டு புதிய சவாலை செய்து வருகின்றனர். தென்னிந்திய நடிகையான அனு இம்மானுவேலும், தனது படு கவர்ச்சியான கருப்பு வெள்ளை புகைப்படத்தை ஷேர் செய்து லைக்குகளை அள்ளி இருந்தார்.

அதிகாலை 2 மணிக்கு

அதிகாலை 2 மணிக்கு

இந்நிலையில், இன்று அதிகாலை 2 மணிக்கு பாதி தூக்கத்தில் அப்படியே படுக்கையில் இருந்து எழுந்தபடி, டீ குடிக்கும் புகைப்படத்தை நடிகை அனு இம்மானுவேல் பதிவிட்டு இணையத்தின் சூட்டை மேலும், அதிகரித்துள்ளார். அந்த புகைப்படத்தில், அவர் வெறும் கட்டம் போட்ட ஷர்ட் மட்டுமே அணிந்திருந்தது நெட்டிசன்களுக்கு ட்ரோல் செய்ய பக்காவாக அமைந்து விட்டது.

பேன்ட் எங்க

பேன்ட் எங்க

இப்படித்தான் வீட்டில் தூங்குவீங்களா என்றும், டீ குடிக்கிறது இருக்கட்டும், உங்க பேன்ட் எங்க என்றும், காலையிலேயே கண் கொள்ளா காட்சியா இருக்கே, ஆமாம், உங்களை இப்படி பப்பி ஷேமா யாரு போட்டோ புடிக்கிறது என நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து தள்ளி வருகின்றனர். எப்படியோ போட்டோ வைரல் ஆகவேண்டும் என பதிவிட்ட அனு போட்ட திட்டம் பொய்க்கவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X