திரிஷா படம் ஃப்ளாப்.. நம்ப தயாராக இல்லையோ?.. சாய் பல்லவியை நம்பும் மணிரத்னம்.. வெற்றி கிடைக்குமா?
சென்னை: இந்திய திரையுலகின் ஐகான் இயக்குநர்களில் ஒருவர் மணிரத்னம். அவர் இதுவரை இயக்கிய படங்களில் தக் லைஃப் படம்தான் மோசமான தோல்வியையும், ட்ரோலையும் சந்தித்தது. அந்தப் படத்தின் கதைக்களத்தை கிண்டல் செய்து கிழித்துவிட்டார்கள் ரசிகர்கள். திரிஷாவும் விவகாரமான கேரக்டரை ஏற்றிருந்தார். படம் படுதோல்வியை சந்தித்தது. அடுத்ததாக அவர் விஜய் சேதுபதி, சாய் பல்லவியை வைத்து புதிய படத்தை இயக்கவிருக்கிறார். அதற்கான அறிவிப்பு இன்று வந்தது. இந்நிலையில் இன்னொரு விஷயம் பேசுபொருளாகியிருக்கிறது.
இந்திய திரைத்துறையில் முக்கியமான இயக்குநர்களில் முதன்மையானவர் மணிரத்னம். பல இயக்குநர்கள் அவரது இயக்கும் ஸ்டைலை பார்த்து சினிமாவுக்கு வந்தவர்கள். அவரை தங்கள் ரோல் மாடலாகவும் ஏற்றுக்கொண்டவர்கள். அதேபோல் இந்தியாவில் எந்த மொழி நடிகராக இருந்தாலும்; அவருக்கு மணிரத்னம் இயக்கத்தில் நடித்துவிட வேண்டும் என்று ஒரு ஆசை கண்டிப்பாக இருக்கும். அவர் இயக்கத்தில் நடித்துவிட்டால் வெற்றியும் கிடைக்கும், நல்ல பெயரும் கிடைக்கும் என்பதால் அந்த ஆசை தோன்றும்.

ஃபார்ம் அவுட்டில் மணிரத்னம்: ஆனால் அவர் கடந்த சில வருடங்களாகவே ஃபார்ம் அவுட்டில் இருப்பதாக பேச்சு எழுந்திருக்கிறது. அவர் இயக்கிய செக்க சிவந்த வானம், தக் லைஃப் ஆகிய இரண்டு படங்களுமே தோல்வியைத்தான் சந்தித்தன. செக்க சிவந்த வானம் படமாவது பரவாயில்லை; தக் லைஃப் படத்தை எல்லாம் கிண்டல் செய்து தள்ளிவிட்டார்கள் ரசிகர்கள். கமல்ஹாசன், சிம்பு, திரிஷா என பெரிய நட்சத்திர பட்டாளமே அதில் நடித்திருந்தாலும் படத்தில் பாடல்களை தவிர்த்து எதுவுமே ஒர்க் அவுட் ஆகவில்லை.
திரிஷாவின் விவகாரமான கேரக்டர்: அதில் திரிஷா ஏற்றிருந்ததும் வில்லங்கமான கேரக்டர்; படத்தின் கதைக்களமும் வில்லங்கமானதாக அமைந்துவிட்டது. குறிப்பாக இப்போது விஜய் - திரிஷா பிரச்னை வேறு ஓடிக்கொண்டிருக்கிறது. அனைவருமே இதெல்லாம் தெரிந்துதான் மணிரத்னம் தக் லைஃப் படத்தில் திரிஷாவுக்கு அப்படி ஒரு கேரக்டரை கொடுத்திருந்தாரோ என்றும் குரல்கள் கேட்க ஆரம்பித்துவிட்டன. எது எப்படியோ தக் லைஃப் படம் மணி சாருக்கு எப்போதும் ஆறாத வடுவை கொடுத்திருக்கிறது என்பது உண்மை.
சாய் பல்லவியுடன் கூட்டணி: எப்படியாவது ஒரு வெற்றி கொடுத்து தன்னை நிரூபிக்க வேண்டுமென்று முனைப்பில் இருக்கிறார் மணி. சூழல் இப்படி இருக்க இன்று அவரது புதிய படம் பற்றிய அறிவிப்பு வந்திருக்கிறது. அதன்படி படத்தில் விஜய் சேதுபதியும், சாய் பல்லவியும் நடிக்கிறார்கள். வழக்கம்போல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்நிலையில் இந்தப் படத்தின் அறிவிப்பு வந்ததை அடுத்து இன்னொரு விஷயம் இணையத்தில் பேசுபொருளாகியிருக்கிறது.
திரிஷாவை நம்பாத மணிரத்னம்: அதாவது திரிஷா தொடர்ந்து படங்களில் நடித்து வந்தாலும் அந்தப் படங்கள் பெரிதாக ஹிட்டாவதில்லை. தக் லைஃப் மட்டுமின்றி விடாமுயற்சி, குட் பேட் அக்லியும் அதே நிலைமைதான். ஆனால் சாய் பல்லவியோ தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்துவருகிறார். அனைத்துக்கும் மேலே இப்போது திரிஷாவை சுற்றி வேறு சில பிரச்னைகளும் ஓடிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலைமையில் திரிஷாவை வைத்து படம் இயக்குவது சரியாக இருக்காது என்பதால்தான் சாய் பல்லவியுடன் கூட்டணி வைத்துவிட்டார் மணிரத்னம் என ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications















