எப்படி டிரெஸ் போட்டா உங்களுக்கென்ன? டென்ஷன் ஆன ஹீரோயின்
சென்னை: மீரா நந்தனை ஞாபகமிருக்கிறதா? தமிழில் வால்மீகி, அய்யனார், சண்டமாருதம், சூரியநகரம் உட்பட சில படங்களில் நடித்திருந்த, மலையாள நடிகை.மலையாள படங்களில் கவனம் செலுத்தி வந்த இவர், பின்னர் சீரியலில் நடித்தார்.
இப்போது அதையும் விட்டுவிட்டு, துபாயில் ஒளிபரப்பாகும் மலையாள எஃப் எம் ஒன்றில் ரேடியோ ஜாக்கியாகப் பணியாற்றி வருகிறார். இதற்காக அங்கு வசித்து வருகிறார்.

வைரல் போட்டோஸ்
சமீபத்தில் இவர் குறைந்த அளவு ஆடை அணிந்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட போட்டோஸ் வைரலானது. இதற்கு ரசிகர்கள் சிலர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

கண்டிக்க மாட்டீங்களா?
உங்களை நம்மூர் ஸ்டைலில் பார்க்கவே ஆசைப்படுகிறோம், இந்த மாதிரி உடைகளை அணிய வேண்டாம் என்று கூறியிருந்தனர். சிலர் இந்தப் புகைப்படங்களை அப்படியே அவர் பெற்றோருக்கு அனுப்பி, இதை கண்டிக்க மாட்டீங்களா? என்றும் கேட்டுள்ளனர்.

இன்ஸ்டாவில் கருத்து
இதற்கு பதிலளித்துள்ள மீரா நந்தன், படங்களில் நடித்துக்கொண்டிருக்கும்போது, வெளியில் யாரையாவது சந்தித்தால் படங்கள் பற்றி விசாரிப்பார்கள். இப்போது நிலைமை மாறிவிட்டது. எல்லாவற்றுக்கும் இன்ஸ்டாவில் வந்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

யாருக்கும் உரிமையில்லை
நான் குட்டையாக உடை அணிந்திருப்பதாக யாரும் குறை கூற முடியாது. என் ஆடையின் அளவைக் கணக்கிட யாருக்கும் உரிமை இல்லை. அப்படியொரு உரிமையை யாருக்கும் கொடுக்கவில்லை. நான் மற்றவர்களை கவர்வதற்காக வாழவில்லை என்று கடுப்பாகத் தெரிவித்துள்ளார்.

அது என் சுதந்திரம்
மேலும் அவர் கூறும்போது, மோசமாக கருத்துத் தெரிவிப்பவர்களைப் பற்றி கவலை இல்லை. இது என் இன்ஸ்டாகிராம் பக்கம். நான் என்ன நினைக்கிறேனோ, அதையெல்லாம் பதிவிடுவேன். அது என் சுதந்திரம். இதில் மற்றவர்கள் தலையிட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











