இயக்குனர்களிடம் அடி வாங்குவதெல்லாம் அந்த காலமாக்கும்: கார்த்திகா

By Siva

சென்னை: இயக்குனர்களிடம் அடி வாங்குவது எல்லாம் அந்த காலம் என்று கார்த்திகா தெரிவித்தார். மேலும் தன்னுடைய அம்மா, பெரியம்மா இடத்தை எந்த ஹீரோயினாலும் பிடிக்க முடியாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பாரதிராஜாவின் இயக்கத்தில் கார்த்திகா நடித்த அன்னக்கொடி படம் அண்மையில் ரிலீஸ் ஆனது. படத்தில் கார்த்திகாவின் நடிப்பு பேசப்பட்டுள்ளது. அவர் தற்போது பிருந்தாவனம் என்ற கன்னட படத்தில் நடிக்கிறார். மேலும் தமிழில் டீல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

பிற மொழி படங்களை விட தமிழ் படங்களில் நடிக்கவே கார்த்திகா விருப்பமாக உள்ளார்.

அம்மா, பெரியம்மா இடத்தை யாராலும் பிடிக்க முடியாது

அம்மா, பெரியம்மா இடத்தை யாராலும் பிடிக்க முடியாது

அம்மா ராதா, பெரியம்மா அம்பிகாவின் இடத்தை எந்த ஹீரோயினாலும் பிடிக்க முடியாது. அவர்கள் இருவரும் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்தவர்கள். சூப்பர்ஸ்டார்களைப் போன்று அவர்களுக்கு ரசிகர்கள் இருந்தனர். தற்போது அப்படி இல்லை. ஏராளமான புதுமுக நடிகைகள் வருவதால் போட்டி அதிகம் என்றார் கார்த்திகா.

அனைத்து ஹீரோக்களையும் பிடிக்கும்

அனைத்து ஹீரோக்களையும் பிடிக்கும்

அனைத்து தமிழ் ஹீரோக்களையும் கார்த்திகாவுக்கு பிடிக்குமாம்.

முன்னணி இயக்குனர்

முன்னணி இயக்குனர்

முன்னணி இயக்குனர்களின் படங்களில் தான் நடிப்பேன் என்றில்லை. வாய்ப்பு கிடைத்ததால் அப்படி நடித்தேன். ஆனால் பணத்திற்காக எனக்கு முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்றார் கார்த்திகா.

அடிவாங்கியதெல்லாம் அந்த காலம்

அடிவாங்கியதெல்லாம் அந்த காலம்

இயக்குனர்களிடம் நடிகர், நடிகைகள் அடிவாங்கியது எல்லாம் அந்த காலம் என்று தெரிவித்துள்ளார் கார்த்திகா. பாரதிராஜா ரொம்பவே மாறிவிட்டார். ஷூட்டிங்கில் சின்ன பையன் போன்று ஜாலியாக பேசி எங்களை நடிக்க வைத்தார் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X