ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

By Siva

Recommended Video

Actress Noorin Shereef: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்- வீடியோ

திருவனந்தபுரம்: உண்மையான திறமைக்கு மதிப்பு உண்டு என்று மகிழ்கிறார் ஒரு அடார் லவ் பட நடிகை நூரின் ஷரீஃப்.

உமர் லுலு இயக்கிய ஒரு அடார் லவ் படத்தை பார்த்தவர்கள் ப்ரியா வாரியரின் நடிப்பை கிண்டல் செய்தனர். நூரின் ஷரீஃபின் நடிப்பை பாராட்டினார்கள். ப்ரியா கண்ணடித்ததால் தன் கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டது என்றார் நூரின்.

உமர் லுலுவுக்கும் ப்ரியாவை ஹீரோயினாக்க வற்புறுத்தப்பட்டதில் அதிருப்தி.

ப்ரியா

ப்ரியா

ப்ரியா வாரியருக்கு மலையாளத்தில் புதுப்பட வாய்ப்புகள் இல்லை. எனக்கும் பேசத் தெரியும், நான் பேசத் துவங்கினால் பல உண்மை வெளியே வரும் என்று ப்ரியா பேசியது திரையுலகினருக்கு பிடிக்கவில்லை. அவரின் நடவடிக்கைகளால் அவரின் கெரியர் துவங்கிய வேகத்தில் முடியப் போகிறது என்று பேசப்படுகிறது.

ஹீரோயின்

ப்ரியாவின் கெரியர் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. ஆனால் நூரின் ஷரீஃபுக்கு புதுப்பட வாய்ப்பு கிடைத்துள்ளது. உன்னி முகுந்தனுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு நூரினுக்கு கிடைத்துள்ளது. இந்நிலையில் அவர் உன்னி முகுந்தனுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

நடிப்பு

நடிப்பு

சேது இயக்கும் சாக்லேட்: ரீடோல்ட் படத்தில் தான் உன்னி முகுந்தனுடன் நடிக்கிறேன். ஒரு அடார் லவ் படம் ரிலீஸான மறுநாளே தயாரிப்பாளர் சந்தோஷ் மற்றும் இயக்குநர் சேது எனக்கு போன் செய்து பேசினார்கள். என் படத்தை பார்த்ததாகவும், வாய்ப்பு தர விரும்புவதாகவும் கூறினார்கள். கதையை கேட்டதுமே பிடித்துவிட்டது. படப்பிடிப்பு எப்பொழுது துவங்கும் என்று சேதுவிடம் கேட்டேன் என்கிறார் நூரின்.

ஹீரோ

ஹீரோ

என் கதாரபாத்திரம் கொஞ்சம் காமெடி கலந்ததாக இருக்கும். நிகழ்ச்சி ஒன்றில் உன்னி முகுந்தனை முதன்முதலாக சந்தித்தேன். அவரை பார்த்ததும் பதற்றமாகிவிட்டது. ஆனால் அவர் ரொம்ப கூல். அவரை நல்ல நாளான விஷுவில் பார்த்ததில் மகிழ்ச்சி என்று நூரின் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X