ஹீரோயின் மெட்டீரியல் இல்லை.. இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கரை இஷ்டத்துக்கு கலாய்க்கும் ரசிகர்கள்!
சென்னை: பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.
நடிகர் கார்த்தியின் விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகவுள்ளார் அதிதி ஷங்கர்.
இந்நிலையில், நீங்க ஹீரோயின் மெட்டீரியல் இல்லை என அவரது ட்வீட்டுக்கு கீழ் ஏகப்பட்ட நெட்டிசன்கள் பதிவிட்டுள்ள கமெண்ட் பரபரப்பை கிளப்பி உள்ளது.

ஷங்கர் பொண்ணு
இயக்குநர் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர் நடிகர் கார்த்தியின் விருமன் படத்தில் நடித்து வருகிறார். அந்த படம் விரைவில் வெளியாக காத்திருக்கிறது. அதனை தொடர்ந்து சிம்புவின் கொரோனா குமார் படத்திலும் அவர் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமூக வலைதளங்களில் ரசிகர்களை ஈர்க்க தொடர்ந்து வீடியோக்களையும் புகைப்படங்களையும் ஷேர் செய்து வருகிறார்.

போட்டோஷூட் வீடியோ
'A little bucket of sass' எனும் கேப்ஷனோடு நடிகை அதிதி ஷங்கர் வெளியிட்ட போட்டோஷூட் வீடியோ ரசிகர்கள் மத்தியில் டிரெண்டாகி வருகிறது. ஆனால், அந்த போட்டோஷூட் வீடியோவுக்கு கீழ் ரசிப்பவர்களை விட அதிதி ஷங்கரை அநியாயத்துக்கு கலாய்ப்பவர்கள் தான் அதிகளவில் உள்ளனர். ஷங்கர் பொண்ணுக்கே இந்த நிலைமையா? என பலரும் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர்.

பங்கம் பண்ணும் நெட்டிசன்கள்
"குரூப் டான்ஸ் பின்னாடி ஆடுற பொண்ணு கூட இன்னும் அழகாக இருக்கும்" என அதிதி ஷங்கரின் வீடியோவை பார்த்து பங்கமாக கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள். மேலும், இப்படி போட்டோஷூட் பண்ணாமல் முழு திறமையும் சினிமாவில் நடிப்பின் மூலம் காட்டுங்கள் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

மயோனிஸ் இல்லையா
எ லிட்டில் பக்கெட் ஆஃப் (சாஸ்) என அதிதி ஷங்கர் கேப்ஷன் கொடுத்த நிலையில், ஏன் மயோனிஸ் இல்லையா என ஒரு foodie ரசிகர் வெறித்தனமாக பிரண்ட்ஸ் பட மீமை போட்டு கலாய்த்துள்ளார். கடைசியாக மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன் இப்படி ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட ட்ரோல் மீம்களால் ஜாலியாக கலாய்க்கப்பட்ட நிலையில், தற்போது ஷங்கர் மகள் சிக்கியுள்ளார்.

ஹீரோயின் மெட்டீரியல் இல்லை
இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்த விருமன் படம் இன்னும் வெளியாகாத நிலையில், இவர் ஒரு ஹீரோயின் மெட்டீரியலே இல்லை என அவரது போட்டோஷூட் வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். மேலும், இப்படியெல்லாம் சர்க்கஸ் பண்ணாதீங்க என்றும் கலாய்த்துள்ளனர்.

கொல்றியே குயின்
ஏகப்பட்ட ட்ரோல்களுக்கு இடையே சில ரசிகர்கள் 'அய்யோ கொல்றியே குயின்' என ஹார்ட்டீன்களையும் பறக்கவிட்டு வருகின்றனர். சோஷியல் மீடியாவில் போட்டோக்களையும் வீடியோக்களையும் பதிவிட்டால் நெகட்டிவ் மற்றும் பாசிட்டிவ் கமெண்ட்டுகள் மாறி மாறி வரத்தான் செய்யும் என்பது அதிதி ஷங்கருக்கும் நன்றாகவே தெரியும்.


Click it and Unblock the Notifications











