உதட்டுக்குதான் ஷாட் வைப்பாங்க.. பிளாஸ்ட் படத்தில் Muscleக்கு வெச்சாங்க.. பூரித்து போகும் அபிராமி
சென்னை: முதலில் ஹீரோயினாக கோலிவுட்டில் கலக்கிய அபிராமி; இப்போது கேரக்டர் ரோலில் நடித்து மெர்சல் செய்துவருகிறார். அந்தவகையில் கடைசியாக அவர் நடித்த பிளாஸ்ட் திரைப்படம் வெளியானது. சுபாஷ் கே. ராஜ் இயக்கியிருந்த அந்தப் படத்தில் அபிராமியுடன் அர்ஜுன், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். படத்துக்கு ரசிகர்களிடையே பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதிலும் சண்டை காட்சிகளில் இரண்டு ஹீரோயின்களும் பிளாஸ்ட் செய்துவிட்டார்கள்.
கேரளாவை சேர்ந்த அபிராமிக்கு தமிழில் வானவில் படத்தில் சினிமா கதவுகள் திறந்தன. அந்தப் படத்துக்கு பிறகு அவர் நடித்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. இதனால் பிஸியான நடிகையாக மாறினார். அந்த நேரத்தில்தான் கமல்ஹாசனுக்கு ஜோடியாக விருமாண்டி படத்தில் அன்னலட்சுமி கேரக்டரில் நடித்தார். அந்த கேரக்டர் அவருக்கு லைஃப் டைம் செட்டில்மென்ட் போன்றது. ரொம்பவே வெயிட்டேஜான அந்த ரோலை அசால்ட்டாக செய்து அனைவரையும் கவர்ந்தார். கமலேகூட அபிராமியின் நடிப்பை பார்த்து ஆச்சரியப்பட்டார்.

மீண்டும் வந்த அபிராமி: விருமாண்டிக்கு பிறகு அபிராமி செம பிஸியாகிவிடுவார்; அவரை கையிலேயே பிடிக்க முடியாது என்று பலரும் நினைத்தார்கள். அவர்கள் நினைத்தது ஒருவகையில் உண்மைதான். அவரை கையில் பிடிக்க முடியவில்லைதான். ஆனால் அவர் பிஸியாக இருந்ததால் அல்ல; அவர் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டதால் அவரை கையில் பிடிக்க முடியவில்லை. சில வருடங்கள் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர்; மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.
பிளாஸ்ட் அபிராமி: அப்படி சமீபத்தில் அவர் நடித்த படம்தான் பிளாஸ்ட். பிரதீப் ரங்கநாதனிடம் உதவி இயக்குநராக இருந்த சுபாஷ் கே. ராஜ் இயக்கியிருக்கும் அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகியிருக்கிறது. நான்கு நாட்களில் கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய் வரை வசூலித்திருக்கிறது. படத்தில் சண்டை காட்சிகள்தான் ஹைலைட்டேன். அதிலும் அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் ஆகியோருக்கும் தரமான சண்டை காட்சிகள் இருக்கின்றன. அவர்களும் அதில் பட்டையை கிளப்பியிருக்கிறார்கள்.
அபிராமி பேட்டி: இந்நிலையில் பிளாஸ்ட் படம் வெற்றி பெற்ற சந்தோஷத்துடன் தனியார் யூடியூப் சேனலுக்கு ப்ரீத்தி முகுந்தன் மற்றும் இயக்குநர் சுபாஷுடன் பேட்டியளித்தார் அபிராமி. அந்தப் பேட்டியில் அவர், "ஹீரோ மாதிரியான பில்ட் அப் ஷாட்டுகளில் முதன்முறையாக நடித்திருக்கிறேன். எங்களுக்கெல்லாம் பிலட் அப் ஷாட்டுகள், ஸ்லோ மோஷன் ஷாட்டுகள் எல்லாம் வைக்கமாட்டார்கள். நெயில் பாலிஷுக்கு, உதட்டுக்குத்தான் வைப்பார்கள். இந்தப் படத்தில்தான் எங்கள் Muscleக்கு வைத்திருக்கிறார்கள். அது நன்றாகவும், வித்தியாசமாகவும் இருந்தது" என்றார்.
இயக்குநர் சொன்னார்: அவரைத் தொடர்ந்து பேசிய இயக்குநர், "பெண்களை வைத்து ஒரு ஆக்ஷன் படம் எடுக்க வேண்டும் என்றுதான் இந்த ஐடியாவை நான் ஆரம்பித்தேன். அப்பா, அம்மா, மகள் மூன்று பேருமே பவர்ஃபுல் என்றுதான் செய்தோம். மூன்று பேருக்குமான மாஸ் சமமாக இருக்க வேண்டும் என்றுதான் எழுதினேன். நான் இவ்வளவு சீக்கிரமாக ஏஜிஎஸ்ஸில் அறிமுகமாவே என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. தள்ளிப்போய்க்கொண்டே இருந்த கனவு ஏஜிஎஸ் நிறுவனம் மூலம் நிறைவேறியிருக்கிறது. இதை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று குறிப்பிட்டார்.


Click it and Unblock the Notifications
