ஜெயிலர் 2வில் நயன்தாரா இல்லையா?.. இந்த பிரபல நடிகை தான் நடிக்கப் போகிறாரா.. பெரிய வாய்ப்பு!

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் 2 உருவாகப் போகிறது என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தரமான வீடியோவுடன் வெளியானது. டைகர் கா ஹுகும் என பாட்டுப் போட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் கூஸ்பம்ப்ஸ் ஆக்கிய அனிருத்தும் நெல்சனும் இணைந்து நடித்த ப்ரோமோவில் கடைசியாக ரஜினிகாந்தின் மரண மாஸ் என்ட்ரி சோஷியல் மீடியாவை நொடிப் பொழுதில் கன்ட்ரோலில் எடுத்துக் கொண்டது.

இந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படம் வெளியாகவுள்ள நிலையில், அடுத்த ஆண்டு நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 என பேக் டு பேக் 2 ஆண்டுகளும் இண்டஸ்ட்ரி ஹிட் கொடுக்க சூப்பர் ஸ்டார் ரெடியாகிவிட்டார் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

jailer 2 rajinikanth shraddha srinath

ஜெயிலர் படத்தில் தமன்னா நடித்த நிலையில், 2ம் பாகத்தில் நயன்தாரா நடிப்பார் என சில தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், தற்போது இன்னொரு பிரபல நடிகையின் பெயர் அடிபட்டு வருகிறது.

11 மில்லியன் வியூஸ்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14ம் தேதி மாலை வெளியான ஜெயிலர் 2 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ப்ரோமோ வீடியோ இதுவரை 11 மில்லியன் பார்வைகளை கடந்து டிரெண்டிங்கில் முன்னிலை வகிக்கிறது. பொங்கலுக்கு சூப்பர் ஸ்டாரிடம் இருந்து தரமான பொங்கல் பரிசு கிடைத்தது என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கூலி படத்தில் இருந்து ஏதாவது அப்டேட் வந்தால் இன்னமும் சிறப்பாக இருக்கும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

தமன்னாவின் காவாலா: ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக அனிருத்தின் இசை அமைந்ததை யாருமே மறக்க முடியாது. முதல் பாடலாக ஹுகும் பாடலை அறிவிக்காமல் தமன்னாவின் "காவாலா" பாடலை ரிலீஸ் செய்து அத்தனை பேரையும் ஆட்டம் போட வைத்தார் நெல்சன். இந்நிலையில், 2ம் பாகத்தில் தமன்னா நடிக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

நயன்தாரா இல்லையா?: தமன்னாவுக்கு பதில் நடிகை நயன்தாராவை ஜெயிலர் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கப் போவதாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின. ஏற்கனவே ரஜினிகாந்த் உடன் சந்திரமுகி, குசேலன், தர்பார், அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். நெல்சன் இயக்கத்தில் கோலமாவு கோகிலா படத்திலும் லேடி சூப்பர் ஸ்டார் நடித்திருந்தார். ஆனால், தற்போது தனுஷ் - நயன்தாரா பிரச்சனைக்குப் பிறகு ஜெயிலர் 2வில் அவர் நடிக்க வாய்ப்புகள் குறைவு எனக் கூறப்படுகிறது.

ஷ்ரத்தா ஸ்ரீநாத்துக்கு ஜாக்பாட்: "யாஞ்சி யாஞ்சி" என தமிழ் சினிமா ரசிகர்களை இறுகப்பற்றிய ஷ்ரத்தா ஸ்ரீநாத் தான் ஜெயிலர் 2வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாக லேட்டஸ்ட் அப்டேட்கள் வெளியாகி உள்ளன. சிவராஜ்குமார் குணமாகி வரும் நிலையில், அவரும் நடிப்பார் என்கின்றனர். மோகன்லால் உள்ளிட்ட பிரபலங்களுடன் இந்த முறை பாலகிருஷ்ணா, பாலிவுட்டில் இருந்து டாப் ஹீரோ என ஏகப்பட்ட ஸ்பெஷல் ஐட்டங்களையும் நெல்சன் பக்காவாக பிளான் செய்திருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. விரைவில் காஸ்டிங் குறித்த அப்டேட்களை சன் பிக்சர்ஸ் வெளியிட சோஷியல் மீடியாவே தெறிக்கும் என்பது கன்ஃபார்ம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X