»   »  இந்திரா காந்தி வேடத்தில் மல்லிகா ஷெராவத்?!

இந்திரா காந்தி வேடத்தில் மல்லிகா ஷெராவத்?!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: டர்ட்டி பாலிடிக்ஸ் படத்திற்குப் பின்னர் இன்னொரு அரசியல் கதையில் நடிக்கப் போகிறார் மல்லிகா ஷெராவத். இம்முறை இந்திராகாந்தியின் வரலாறு பற்றிய கதை என்கின்றன பாலிவுட் வட்டார தகவல்கள்.

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வாழ்க்கை சினிமா படமாகிறது. இந்திராவின் இளமை கால வாழ்க்கை, குடும்பம், அரசியல் பணிகள் இப்படத்தில் இடம் பெறுகிறது. அவர் சுட்டுக் கொல்லப்பட்டதையும் இதில் காட்சிபடுத்துகின்றனர். இப்படத்துக்கான திரைக்கதை தயாராகிவிட்டது

மல்லிகா ஷெராவத்

மல்லிகா ஷெராவத்

இந்திரா காந்தி வேடத்தில் நடிக்க பொருத்தமான நடிகையை தேடி வந்தனர். தற்போது மல்லிகா ஷெராவத் தேர்வாகியுள்ளார். படக்குழுவினர் நிறைய நடிகைகளை பரிசீலித்து இறுதியில் மல்லிகா ஷெராவத்தை தேர்வு செய்துள்ளனர்.

இந்திரா காந்தி சாயல்

இந்திரா காந்தி சாயல்

இந்திரா காந்தியின் கம்பீர சாயல் மல்லிகா ஷெராவத்துக்கு இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். மல்லிகா ஷெராவத்தும் இந்த சவாலான கேரக்டரில் நடிக்க விருப்பம் தெரிவித்து உள்ளார்.

நேரு குடும்ப சம்மதம்

நேரு குடும்ப சம்மதம்

தன்னை அந்த வேடத்துக்கு தயார்படுத்தியும் வருகிறார். தற்போது நேரு குடும்பத்தினரின் ஒப்புதலுக்காக இது அனுப்பப்பட்டு உள்ளது.

விரைவில் படப்பிடிப்பு

விரைவில் படப்பிடிப்பு

இந்திரா வேடத்தில் மல்லிகா ஷெராவத் நடிக்க ஆட்சேபனை இல்லை என்று அவர்கள் தெரிவித்ததும் படப்பிடிப்பை துவங்கும் முடிவில் இருக்கின்றனர்.

டர்ட்டி பாலிடிக்ஸ்

டர்ட்டி பாலிடிக்ஸ்

இவர் சமீபத்தில் ‘டர்ட்டி பாலிடிக்ஸ்' என்ற அரசியல் படத்தில் நடித்து பிரபலமானார். இந்த படத்தில் அவர் தேசிய கொடியை உடுத்தி கொண்டு போஸ் கொடுப்பது போன்று வெளியான படங்கள் சர்ச்சையை ஏற்படுத்தின. இந்திரா காந்தி படத்தில் இதுபோன்ற சர்ச்சை எல்லாம் கிளப்பாமல் நடிப்பார் என்று நம்புவோமாக.

English summary
After starring in Dirty Politics, actress Mallika Sherawat said that she would love to feature in a biopic on late prime minister Indira Gandhi.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil