ஆபாசப் படம் வெளியிட்டவர்கள் மீது போலீசில் புகார் செய்ய தமன்னா முடிவு!

By Shankar

தன்னை ஆபாசமாக சித்தரித்து இணைய தளத்தில் படம் வெளியிட்டவர்கள் மீது போலீசில் புகார் கொடுக்க முடிவு செய்துள்ளார் நடிகை தமன்னா.

தமன்னாவின் ஆபாச படங்கள் சமீபத்தில் இன்டர்நெட்டில் வெளியானது. இதுபற்றி தகவல் தெரிந்ததும் அதிர்ச்சியடைந்த அவர், அந்த படம் போலியானது, நிர்வாண பெண்ணின் உடலோடு எனது தலையை ஒட்டி வெளியிட்டு உள்ளனர் என்று விளக்கமளித்தார்.

கோபம்

கோபம்

இந்த படத்தை வெளியிட்டவர்கள் முட்டாள்கள்.. தங்களுக்கும் அக்காள், தங்கை இருக்கின்றனர் என்பதை உணராத புல்லுருவிகள் என்று ஆவேசமாக கண்டனம் தெரிவித்திருந்தார்.

ஆரம்பத்தில் அமைதி

ஆரம்பத்தில் அமைதி

இந்த விவகாரத்தை போலீஸ் வரை கொண்டு போய் சர்ச்சையாக்க வேண்டாம்.. தனக்குத்தான் அவமானம் என்று நினைத்து முதலில் அமைதியாக இருந்தார் தமன்னா.

வேகமாகப் பரவியது

வேகமாகப் பரவியது

ஆனால் இந்த ஆபாச படங்கள் இணைய தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. ஏராளமானோர் பதிவிறக்கம் செய்து வருகிறார்கள். சிலர் தமன்னாவின் நிஜமான ஆபாச படம் என்றே நம்புகின்றனர்.

போலீசில் புகார்

போலீசில் புகார்

எனவே படங்களை வெளியிட்டவர்கள் மீதும், இந்தப் படங்களை இணையத்திலிருந்து நீக்குமாறும் போலீசில் புகார் அளிக்கும்படி தமன்னாவிடம் நண்பர்களும் உறவினர்களும் வற்புறுத்தினார்கள். இதைத் தொடர்ந்து ஹைதராபாத் போலீசாரிடம் தமன்னா இன்று புகார் அளிக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X