மீண்டும் மேக்கப் போடும் 'ஓ போடு' ராணி!
முன்னாள் நாயகிகள் எல்லாம் ஒரே நேரத்தில் பேசி வைத்துக் கொண்டு சினிமாவுக்குத் திரும்புகிறார்கள் போலிருக்கிறது.
கதாநாயகியாக அறிமுகமாகி, குத்தாட்ட நாயகியாக மாறி, திடீரென்று காணாமல் போன ராணி மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
ராமராஜன் ஜோடியாக வில்லுப் பாட்டுக்காரன் படத்தில் அறிமுகமானவர் ராணி.
அதற்குப் பிறகு குத்துப்பாட்டு, கவர்ச்சி ஆட்டம், வில்லி வேஷம் என்று எல்லா மொழிகளிலும் சேர்த்து 400 படங்களுக்கு மேல் நடித்து முடித்துவிட்ட அவர். சில காலம் நடிப்பதை நிறுத்தி இருந்தார்.

மீண்டும்..
ஆடிய காலும், மேக்கப் போட்ட முகமும் அமைதியாக இருக்காது என்ற கோடம்பாக்க வழக்கத்தை உண்மையாக்கும் வகையில், மீண்டும் மேக்கப் ரூமுக்கு திரும்பியுள்ளார்.

தெலுங்குப் படங்கள்
ஆந்திராவில் 2011 -ல் அவர் நடித்த "நட்சாவுலே"படத்திற்காக நந்தி விருதை பெற்ற அவர்,தற்போது அனுஷ்கா நடிக்கும் "ராணி ருத்ரம்மா தேவி," "பிரேம்ல பட்டாண்டி," "ஒக லைலா கோசம்" " 3 இடியட்ஸ்" போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

தமிழில்..
தெலுங்கோடு நிறுத்திவிட்டால் எப்படி.. என்று தமிழிலும் நடிக்க வாய்ப்புகள் தேடுகிறாராம். எந்த வேடமானாலும் கொடுங்க, நடிக்கிறேன் என்று தன் பழைய தொடர்புகளிடம் கேட்டு வருகிறாராம் ராணி.

ஆன்ட்டி டான்ஸ்?
இப்போது ஆந்திர ஆன்ட்டிகள் குத்தாட்டம் போடும் காலமாச்சே... வெள்ளரிக்க பிஞ்சு வெள்ளரிக்கா (காதல்கோட்டை), ஓ போடு (ஜெமினி) மாதிரி ஒற்றை பாடலுக்கு ஆட ஐடியா உண்டா?
"சாரி...நோ டான்ஸ்.. ஒன்லி காரக்டர்ஸ் மட்டும் தான், அம்மாவா, அக்காவா, அண்ணியா, வில்லியா? எதுவானாலும் ஓ.கே நான் ரெடி நீங்க ரெடியா?"


Click it and Unblock the Notifications











