கிளம்பு.. அடுத்த புராஜெக்ட் கிடைச்சிடுச்சு.. ஹைதராபாத்துக்கு அமலா பாலும் விமானத்தில் படையெடுப்பு!

சென்னை: அண்ணாத்த பட ஷூட்டிங்கிற்காக ஹைதராபாத்துக்கு தனி விமானத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா சென்ற நிலையில், அடுத்ததாக அமலா பாலும் ஹைதராபாத்துக்கு விமானத்தில் பறந்துள்ளார்.

ஏற்கனவே ஹைதராபாத்தில் தல அஜித்தின் வலிமை ஷூட்டிங் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

கழுத்தில் ருத்ராட்ச மாலை மற்றும் முகத்தில் ஷீல்டு போட்டுக் கொண்டு விமானத்தில் அமர்ந்து இருக்கும் புகைப்படங்களை தற்போது அமலா பால் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.

ஆடை படத்தால் வந்த சிக்கல்

ஆடை படத்தால் வந்த சிக்கல்

மேயாத மான் படத்தை இயக்கிய ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் ஆடையே அணியாமல் நடித்த ஆடை படத்தால் கோலிவுட்டில் அவருக்கு மிகப்பெரிய சிக்கல் உருவானது. செம போல்டான நடிப்பை வெளிக்காட்டிய அமலா பாலுக்கு அந்த படத்திற்கு பிறகு எந்தவொரு புதுப்பட வாய்ப்பும் கிடைக்காமல் ஓரங்கட்டப்பட்டார்.

அதோ அந்த பறவை என்னாச்சு?

அதோ அந்த பறவை என்னாச்சு?

ஆடை படத்தைத் தொடர்ந்து அமலா பால் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட அதோ அந்த பறவை போல திரைப்படம் இந்த டிசம்பர் வந்தும் என்ன ஆனது என்றே தெரியவில்லை. தியேட்டர்கள் மூடப்பட்ட நிலையில், ஒடிடியில் கூட அந்த படம் வெளியாகவில்லை. அடுத்த ஆண்டு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்ஸ்டாகிராமில் வைரல்

இன்ஸ்டாகிராமில் வைரல்

லாக்டவுனில் கேரளாவில் தனது அம்மாவுடன் வசித்து வந்த நடிகை அமலா பால், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் வாயிலாக ஏகப்பட்ட போட்டோக்களையும், வாழ்க்கை தத்துவங்களையும் பதிவிட்டு தனது ரசிகர்களுடன் எப்போதுமே தொடர்பிலே இருந்து வந்தார். சர்ச்சைகள் பல வந்தாலும், அதையெல்லாம் துணிச்சலோடு எதிர்கொண்டு எதிர்நீச்சல் போட்டு வருகிறார்.

புது புராஜெக்ட்

புது புராஜெக்ட்

புதிதாக எந்தவொரு ஷூட்டிங்கிலும் ஒப்பந்தமாகமல் இருந்து வந்த நடிகை அமலா பால், சில விளம்பர படங்களுக்கு போட்டோஷூட் நடத்தி வந்தார். இந்நிலையில், தனது அடுத்த புராஜெக்ட் தொடங்கப் போகிறது என்றும், அதற்கான ஷூட்டிங்கிற்காக ஹைதராபாத்துக்கு புறப்படுகிறேன் என தற்போது போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்.

கிளம்பிப் போ

மேலும், அதற்கு கேப்ஷனாக புதிய நினைவுகளை உருவாக்கு, பழைய நண்பர்களுடன் தொடர்புகொள், மறந்துவிட்ட எதிரிகளிடம் மன்னிப்பு கேள், ஸ்பெஷலானவர்களுக்கு நன்றி சொல், உன்னைத் தேடு, ஏதாவது செய் போ, கிளம்பிப் போ என பதிவிட்டும் பாராட்டுக்களை அள்ளி வருகிறார் அமலா பால்.

ரஜினிகாந்த், நயன்தாரா

ரஜினிகாந்த், நயன்தாரா

சில தினங்களுக்கு முன்பு தான் நயன்தாராவும் ரஜினிகாந்தும் விமானம் மூலமாக ஹைதராபாத்துக்கு அண்ணாத்த படத்தின் ஷூட்டிங்கிற்காக சென்றனர். விமானத்திலேயே சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு கேக் கட்டிங்கும் நடந்தது. அதன் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகின.

வலிமை ஷூட்டிங்

வலிமை ஷூட்டிங்

அதே போல தல அஜித்தின் வலிமை பட ஷூட்டிங்கும் சிம்புவின் மாநாடு பட ஷூட்டிங்கும் ஹைதராபாத்தில் தான் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகை அமலா பாலும் தனது புதிய பட ஷூட்டிங்கிற்காக ஹைதராபாத்துக்கு விமானத்தில் விரைந்துள்ளார். ஒட்டுமொத்த கோலிவுட்டும் ஹைதராபாத்தில் ஷூட்டிங்கிற்காக முகாமிட்டுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X