90ஸ் கிட்ஸின் கனவு கன்னிகள்.. ஒருத்தர் பாக்கெட்டுக்குள்ள ஒருத்தர் கை.. வேற லெவலுல இருக்காங்களே ப்பா
சென்னை: 90ஸ் கிட்ஸ்கள் எப்போதுமே தாங்கள் கொடுத்து வைத்தவர்கள் என்று சொல்வதுண்டு. தாங்கள் சிறு வயதில் இருந்தபோதெல்லாம் வந்த திரைப்படங்கள் நடித்த நடிகர்கள், நடிகைகள் போல் இப்போதைய திரைப்படங்களோ அல்லது ஆர்ட்டிஸ்ட்டுகளோ இல்லை என்பது அவர்களது கருத்து. இந்தச் சூழலில் 90ஸ் கிட்ஸின் கனவு கன்னிகளின் நாஸ்டால்ஜியா புகைப்படங்கள் கவனம் ஈர்த்திருக்கின்றன.
சினிமாவையும், சினிமா கலைஞர்களையும் ரசிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. சொல்லப்போனால் அந்த கனவு தொழிற்சாலைக்குள் சென்று அவர்களை போல் நாமும் பிரபலமாக வேண்டும்; பணம் சேர்க்க வேண்டும் என்று பலரும் நினைப்பார்கள். இப்போதைக்கு இருக்கும் நடிகர்கள், நடிகைகள், பெரும்பாலான இயக்குநர்கள் எல்லாம் 90கள், 2000த்தின் ஆரம்ப கால சினிமாவை பார்த்து வளர்ந்தவர்கள்.
அவர்கள் காலம்: அதன் காரணமாகவே இப்போதைக்கு வரும் தமிழ் படங்களில் அதிகபடியான ரெட்ரோ பாடல்கள், 90ஸ் காலகட்டம் என பெரும்பாலும் கொண்டு வருகிறார்கள். அவை இப்போதைய 2கே கிட்ஸ்களுக்கு கிரிஞ்சாக இருக்கலாம். ஆனால் அவை எப்போதுமே ஒரு சுகத்தை கொடுக்கும் என்பதில் 90ஸ் கிட்ஸின் ஆணித்தரமாக இருக்கிறார்கள். முக்கியமாக அப்போதைய நடிகைகள் எல்லாம் இப்போது வயதாகிவருவதை பார்த்து அவர்கள் கண்ணீரும் வடிக்கிறார்கள்.

மூன்று கன்னிகள்: இந்நிலையில் 90களில் சினிமாவில் நுழைந்து தனக்கென தனி மார்க்கெட்டை பிடித்து சில வருடங்கள் கோலிவுட்டை ரூல் செய்த நடிகைகளான ஜோதிகா, லைலா, ரம்பா ஆகிய மூன்று பேரும் ஒருவருக்கொருவர் பேண்ட் பாக்கெட்டில் கைகளை விட்டபடி முன்னர் எடுத்த ஃபோட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் தீயாக பரவி ட்ரெண்டாகியிருக்கிறது. அதனைப் பார்த்த ரசிகர்களோ எவ்வளவு ஒற்றுமையாக, ஈகோ இல்லாமல் இருந்திருக்கிறார்கள் என்றும்; அது ஒரு காலம்தான் என்றும் உச் கொட்டி தங்கள் பழைய நினைவுகளை மீட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
ஜோதிகா: சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜோதிகா கோலிவுட்டின் டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர். பல முன்னணி நடிகர்களுடன், பல மொழிகளில் நடித்த அவர் இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். ஆனால் சின்ன வித்தியாசமாக தமிழ் படங்களில் அதிக கவனம் செலுத்துவதை காட்டிலும் பாலிவுட்டில்தான் அவர் இப்போது முழு கவனத்தை வைத்திருக்கிறார்.

ரம்பா: அதேபோல் 90களில் சினிமாவில் நுழைந்து மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார் ரம்பா. விஜய், அஜித், ரஜினி, கமல், கார்த்திக் என பல நடிகர்களுடன் நடித்திருக்கிறார். ரம்பாவின் நடனம், அவரது அழகு, கவர்ச்சி என அத்தனையையும் ரசிகர்கள் விரும்பினார்கள். ஒருகட்டத்தில் திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்ட அவர்; மீண்டும் எப்போது நடிக்க வருவார் என்பதுதான் பலரது கேள்வியாக இருக்கிறது.
லைலா: அதேபோல் லைலாவும் 90கள், 2000 ஆரம்பத்தில் ஒரு கலக்கு கலக்கியவர். விக்ரம், பிரபுதேவா என பலருடன் நடித்த அவரும் வாய்ப்புகள் குறைந்த சமயத்தில் திருமணம் செய்துகொண்டார். சில வருடங்கள் ஒதுங்கியிருந்த அவர் இப்போது மீண்டும் பிஸியாகியிருக்கிறார். சர்தார், வதந்தி வெப் சீரிஸ் என நடிக்க ஆரம்பித்திருக்கிறார். இப்போது இவர்கள் எடுத்துக்கொண்ட அந்த பழைய ஃபோட்டோவை பார்த்த ரசிகர்களோ சூர்யவம்சம் தேவயானி போல், 'காலம் எவ்வளவு வேகமாக சுழலுது பார்த்திங்களா' என கமெண்ட்ஸ் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











