முதலில் ஓட்டு போடுங்க.. சி.எம் ஆகணும்.. திரிஷா போட்டிருந்த மொரட்டு பிளான்.. ஆத்தாடி இதுவேறயா?
சென்னை: கோலிவுட்டில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக முன்னணி நடிகையாக ஜொலித்துக்கொண்டிருப்பவர் திரிஷா. அவர் இப்போதும் டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்துவருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான தக் லைஃப் திரைப்படம் தோல்வியடைந்தது. இருப்பினும் மேலும் சில படங்களில் அவர் தொடர்ந்து கமிட்டாகியிருப்பதாக திரைத்துறையில் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மௌனம் பேசியதே படத்தில் ஹீரோயினாக அறிமுகமான திரிஷா குறுகிய காலத்திலேயே டாப் நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார். ர்ஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, ரவி மோகன், தனுஷ், கார்த்தி, ஆர்யா என கிட்டத்தட்ட எல்லா ஹீரோக்களுடனும் நடித்துவிட்டார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் தனக்கான தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார்.
இன்னமும் டாப்தான்: ஃபுல் ஃபார்மில் சென்றுகொண்டிருந்த அவரது கிராஃப் இடையில் சில வருடங்களுக்கு முன்பு கொஞ்சம் தடுமாற்றத்தை சந்தித்தது. அதனால் அவரது கரியர் காலி என்று பலரும் ஆரூடம் கூறினார்கள். ஆனால் 96 திரைப்படம் அவருக்கு தரமான கம்பேக்காக அமைந்தது. அப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு மீண்டும் கோலிவுட்டில் டாப் நடிகை என்ற இடத்துக்கு வந்துவிட்டார் அவர்.

குறையாத மவுசு: அப்படத்தின் வெற்றிக்கு பிறகு திரிஷாவின் காட்டில் மழைதான். பொன்னியின் செல்வன், விடாமுயற்சி, குட் பேட் அக்லி, லியோ, தக் லைஃப் என டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்தார். இவற்றில் அத்தனை படங்களுமே பெரிய ஹிட் இல்லையென்றாலும் திரிஷாவின் திறமையும், அவரது அழகும் வேறு பரிணாமத்தில் இருந்தன. அடுத்ததாக சூர்யாவுடன் கருப்பு படத்தில் ஜோடி சேர்ந்திருக்கிறார்.
நோ திருமணம்: மேற்கொண்டு சில படங்களிலும் அவர் கமிட்டாகியிருப்பதாக தெரிகிறது. இது ஒருபக்கம் இருக்க அவருக்கு வயது 40க்கு மேல் ஆகிறது. ஆனால் இன்னமும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். திருமணத்துக்கு பிறகான விவாகரத்தில் தனக்கு ஈடுபாடு இல்லை; தனக்கு சரியானவர் வந்தால் திருமணம் செய்துகொள்வேன் என்று அவர் அறிவித்திருக்கிறார். இந்நிலையில் அவர் கொடுத்திருக்கும் பழைய பேட்டி அதிகம் ஷேர் செய்யப்பட்டுவருகிறது.
திரிஷாவின் பேட்டி: அவர் பல வருடங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சிக்கு ஒரு பேட்டி கொடுத்தார். அந்தப் பேட்டியில் அவரிடம் சினிமாவை தவிர்த்து வேறு எதிலும் ஆர்வம் இருக்கிறதா என்று கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு திரிஷாவோ, 'நான் சி.எம் ஆக வேண்டும். நிஜமாகவே சொல்கிறேன். நான் முதலமைச்சர் ஆக வேண்டும். இன்னும் பத்து வருடங்களில் பாருங்கள். நீங்கள் முதலில் எனக்கு ஓட்டு போட்டு வெல்ல வையுங்கள். நான் என்ன செய்வேன் என்று சொல்கிறேன்" என்றார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், அட திரிஷாவுக்கு அப்போவே அரசியல் ஆசை இருந்திருக்கிறது. பிறகு என்ன தலைவியை ஒரு கட்சியில் சீக்கிரம் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று கமெண்ட்ஸ் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.


Click it and Unblock the Notifications











