Fathers day: பழசுதான்.. ஆனாலும் பார்க்கலாம்.. அப்பாவுடன் போட்டி போட்டு விளையாடும் அதுல்யா ரவி!

சென்னை: இன்று உலக தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நடிகை அதுல்யா ரவி தனது அப்பாவுடன் போட்டிப் போட்டு விளையாடிய வைரல் வைரலாகி வருகிறது.

Recommended Video

அப்பாவுக்கு தெரியாது | FATHERS DAY SPECIAL VIDEO | FILMIBEAT TAMIL

நடிகை அதுல்யா ரவி கோயம்புத்தூரை பூர்விகமாக கொண்டவர். கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து ஏமாளி, நாகேஷ் திரையரங்கம், சுட்டு பிடிக்க உத்தரவு, அடுத்த சாட்டை கேப்மாரி ஆகிய படங்களில் நடித்துள்ளார். கடைசியாக அவரது நடிப்பில் நாடோடிகள் 2 படம் வெளியானது.

குறைந்த படங்கள்

குறைந்த படங்கள்

வட்டம் படத்தில் நடித்து வருகிறார் நடிகை அதுல்யா ரவி. இந்தப் படத்தில் சிபிராஜ், நிக்கி கல்ராணி, ஆண்ட்ரியா ஜெர்மையா ஆகியோர் நடித்து வருகின்றனர். குறைந்த எண்ணிக்கையிலான படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார்.

அசத்தல் போட்டோக்கள்

அசத்தல் போட்டோக்கள்

நடிகை அதுல்யா ரவி சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள நடிகைகளில் ஒருவர். லாக்டவுன் கேப்பில் எங்கு ரசிகர்கள் மறந்து விடப்போகிறார்ளோ என்று நினைத்த அதுல்யா ரவி தொடர்ந்து தனது அசத்தல் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அப்பாவுடன் விளையாட்டு

அப்பாவுடன் விளையாட்டு

அவ்வப்போது தனது தம்பியுடன் வீட்டில் செய்யும் சேட்டைகளையும் வீடியோவாக வெளியிட்டு ரசிக்க வைத்து வருகிறார். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது அப்பாவுடன் தென்னந்தோப்பில் விளையாடிய வீடியோவை ஷேர் செய்திருந்தார்.

பூரிக்க வைக்கும்..

பூரிக்க வைக்கும்..

அதில் தென்னை மரத்தில் சாய்ந்தப்படி அப்பாவும் மகளும் யார் வேக வேகமாக நாக்கை நீட்டுவது என போட்டி வைத்தனர். அதுல்யாவின் அப்பா வேகமாக நாக்கை நீட்ட அவருக்கு போட்டியாக அதுல்யாவும் முயற்சி செய்கிறார். அப்பாவும் மகளும் விளையாடும் அந்தக் காட்சி பார்க்கும் போதே பூரிக்க வைக்கிறது.

கண்கலங்கிய அதுல்யா

கண்கலங்கிய அதுல்யா

அதுல்யாவின் அப்பாவும், எல்லா அப்பாக்களையும் போல தனது குழந்தையோடு குழந்தையாக மாறி பொறாமைப் பட வைக்கிறார். ஏற்கனவே நடிகை அதுல்யா ரவி தனது அப்பாதான் தனது ஹீரோ என்றும் தனக்கு எல்லாமே அவர்தான் என்றும் பல நேர்க்காணல்களில் கூறி கண் கலங்கியிருக்கிறார்.

என்னை நம்புங்கள்

என்னை நம்புங்கள்

இன்று சர்வதேச தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நடிகை அதுல்யா ரவியின் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோ திட்டமிடப்பட்டு எடுக்கப்பட்டதல்ல என்னை நம்புங்கள் என கூறியிருக்கிறார் அதுல்யா.

என்னை சிரிக்க வைக்க

என்னை சிரிக்க வைக்க

மேலுட் தான் டல்லாக உணரும்போதெல்லாம் என் அப்பா என்னை சிரிக்க வைப்பதற்கும் சந்தோஷப்படுத்துவதற்கும் இது மாதிரியான க்ரேஸி விஷயங்களைச் செய்வார். அதுபோல் அவர் செய்யும் போது எதிர்பாராத விதமாக அது கேப்ட்சர் செய்யப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X