ஜிவி பிரகாஷின் 3டி படத்தில் இணைந்த சந்தானம் பட ஹீரோயின்!

By Vignesh Selvaraj

Recommended Video

ஜி.வி. பிரகாஷை பற்றி ஐங்கரன் இயக்குனர் பேட்டி!- வீடியோ

சென்னை : ஜி.வி.பிரகாஷை வைத்து 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா', சிம்புவை வைத்து 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' ஆகிய படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் 'AAA' படத்தின் தோல்வியால் வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வந்தார்.

இதையடுத்து, படத்தின் தோல்விக்கு சிம்புவை குற்றம்சாட்டிய இவர், கடும் மன உளைச்சலில் இருந்தார். அவரை அழைத்து முதல்பட நாயகனான ஜிவி பிரகாஷ் வாய்ப்புக் கொடுத்தார். 'அரண்மனை' படத்தைத் தயாரித்த விஷன் மீடியா தினேஷ் கார்த்திக் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

One more heroine joins with GV prakash in 3d film

இந்தப் படம் ஃபேன்டஸி திரைப்படமாக 3டி தொழில்நுட்பத்தில் உருவாகிறது. இந்தப் படத்தில் நடிகை அமிரா தஸ்தர் நாயகியாக நடித்து வருகிறார். இவர் 'அனேகன்' படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தவர். சோனியா அகர்வாலும் முக்கிய வேடத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். யோகிபாபு, ஆனந்தராஜ், விடிவி கணேஷ் ஆகியோரும் நடிக்கின்றனர்.

ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளராகவும் பணியாற்றுகிறார். முதல்கட்ட படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பே ஊட்டியில் நடைபெற்ற நிலையில், அடுத்து சென்னை மற்றும் காரைக்குடி பகுதிகளில் ஷூட்டிங் நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில், நடிகை சஞ்சிதா ஷெட்டி இப்படத்தில் இன்னொரு நாயகியாக இணைந்துள்ளார். இந்தப் படம் தவிர 'ஐங்கரன்', 'சர்வம் தாளமயம்', உள்ளிட்ட பல படங்களின் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார் ஜிவி பிரகாஷ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X