மும்பைல தேடறாங்க...விஜய் தேவரகொண்டா- ஜான்வி படத்தில் இன்னொரு ஹீரோயின்
மும்பை: புரி ஜெகநாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் படத்தில் அவர் ஜோடியாக ஜான்வி கபூருடன் இன்னொரு பாலிவுட் ஹீரோயினும் நடிக்கிறார்.
அர்ஜூன் ரெட்டி படம் மூலம் பிரபலமான தெலுங்கு ஹீரோ, விஜய் தேவரகொண்டா. இவர் தமிழில், நடிகையர் திலகம், நோட்டோ, டியர் காம்ரேட் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இப்போது, வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.
இதையடுத்து அவர் நடிக்கும் படத்தை புரி ஜெகநாத் இயக்குகிறார். இவர் தெலுங்கு, இந்தி, கன்னடம் உட்பட 30 படங்களுக்கு மேல் இயக்கியவர்.

ஜான்வி கபூர்
இந்தப் படத்தை, இந்தி பட இயக்குனர் கரண் ஜோகர் இணைந்து தயாரிக்கிறார். இதில் நடிகை ஶ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ஹீரோயினாக நடிக்கிறார். இதன் மூலம் தென்னிந்திய படத்தில் அவர் அறிமுமாக உள்ளார்.

சிபாரிசு
முதலில் ஆலியா பட், அனன்யா பாண்டே ஆகியோர் பெயர்தான் பரிசீலனையில் இருந்தது. பின்னர் கரண் ஜோகர், ஜான்வி கபூர் பெயரை, புரி ஜெகந்நாத்துக்கு சிபாரிசு செய்துள்ளார். இதையடுத்தே அவர் நடிப்பதாகக் கூறப்படுகிறது. ஷூட்டிங் பிப்ரவரியில் தொடங்குகிறது.

3 மொழிகளில்
இந்தப் படம் மூலம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகிறார் ஜான்வி. இது தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இன்னொரு ஹீரோயின்
இதற்கிடையே, இந்த படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு ரூ.3.5 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் இந்தப் படத்தில் இன்னொரு பாலிவுட் ஹீரோயினும் இருக்கிறார். அவரை மும்பையில் தேர்வு செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











