எவ்வளவு வளர்ந்தாலும் பழசை மறக்காத நயன்தாரா.. நெகிழ்ந்து போன ரசிகர்கள்.. என்ன நடந்தது?
சென்னை: நடிகை நயன்தாரா கோலிவுட்டின் டாப் நடிகையாக திகழ்கிறார். ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் அவர் கடைசியாக அன்னபூரணி படத்தில் நடித்திருந்தார். அவருக்கு அந்தப் படம் 75ஆவது படம். ரொம்பவே எதிர்பார்த்திருந்த நயனுக்கு அன்னபூரணி ஏமாற்றத்தையே கொடுத்தது. தற்போது மண்ணாங்கட்டி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தச் சூழலில் நயன்தாரா செய்த விஷயம் ஒன்று ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.
கேரளாவில் ஒரு டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த நயன்தாரா. தமிழில் ஐயா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். முதல் படம் ஹிட்டாகி அவரது நடிப்புக்கு ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்தது. அதனையடுத்து ரஜினிகாந்த்துடன் சந்திரமுகி படத்தில் நடித்து முன்னணி நடிகை வரிசையில் இணைந்தார். அதனையடுத்து அவருக்கு தொடர்ந்து ஹிட் படங்களாக அமைந்தன. மேலும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் கவனத்தை செலுத்த ஆரம்பித்தார் நயன்.

இரண்டாவது இன்னிங்ஸ்: தொடர்ந்து சில பிரச்னைகளை சந்தித்த அவர் தனது இரண்டாவது இன்னிங்ஸை மிகவும் கவனத்தோடு தொடங்கினார் . அந்தவகையில் அவர் நடித்த படங்கள் ஹிட்டாக லேடி சூப்பர் ஸ்டாராக மாறினார். இதற்கிடையே நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது விக்னேஷ் சிவனை காதலித்தார். இருவரது காதலும் பல வருடங்கள் கழித்து கடந்த 2022ஆம் ஆண்டு திருமணத்தில் முடிந்தது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.
இதிலும் உதாரணம்தான்: நடிகைகளுக்கு திருமணமானாலே சினிமாவிலிருந்து ஒதுங்கிவிடுவார்கள் என்ற விதி காலங்காலமாக தமிழ் சினிமாவில் இருக்கிறது. ஆனால் அதையெல்லாம் உடைத்து திருமணத்துக்கு பிறகும் நடிக்கலாம் என தற்கால நடிகைகளுக்கு முன் உதாரணமாக இருக்கிறார் நயன்தாரா. ஹிந்தியில் அவர் நடித்த ஜவான் படம் மெகா ஹிட்டாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஹிந்தி பக்கம் நயன் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துவதாக சொல்லப்படுகிறது.
பிஸியானாலும் அம்மாதான்: அவரது நடிப்பில் கடைசியாக வெளியான அன்னபூரணி திரைப்படம் அவருக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. அது அவரது 75ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் அவர் மண்ணாங்கட்டி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அதேபோல் மலையாளத்திலும் டியர் ஸ்டூடண்ட் என்ற படத்தில் கமிட்டாகியிருக்கிறார். இப்படி தொடர்ந்து பிஸியாக இருந்தாலும் தனது மகன்கள், கணவருடன் நேரம் செலவழிப்பதில் கவனமாக இருக்கிறார். அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்தப் புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸை அள்ளுவதும் வழக்கம்.
லேடி அஜித்: நயன்தாராவை பொறுத்தவரை தன்னுடைய பட ப்ரோமோஷன்களுக்கே செல்லமாட்டார். அந்தவகையில் பார்த்தால் அவரை ஒரு லேடி அஜித் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பவர். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் விஷ்ணுவர்தன் இயக்கும் நேசிப்பாயா படத்தின் விழாவில் கலந்துகொண்டு ஆச்சரியப்படுத்தினார் நயன். அந்தப் படத்தில் முரளியின் இளைய மகனும், அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். அதிதி ஹீரோயினாக நடிக்கிறார்.
நெகிழ செய்த நயன்: இந்நிலையில் நேசிப்பாயா படத்தின் விழாவில் நயன்தாரா செய்த செயல் ஒன்று ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறது. அதாவது அந்த விழாவில் நயன்தாரா அமர்ந்திருந்த இருக்கைக்கு பின் தயாரிப்பாளர் தேனப்பனும் அமர்ந்திருந்தார். அவரை பார்த்த நயன் உடனடியாக எழுந்து அவருக்கு வணக்கம், நலம் விசாரித்தார். இதனை பார்த்த ரசிகர்கள் எவ்வளவு உயரம் சென்றாலும் பழசை மறக்கலையே நயன் என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். சிம்புவுடன் நயன்தாரா ஜோடியாக நடித்த வல்லவன் படத்தை தயாரித்தது தேனப்பன் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











