Don't Miss!
- Finance வெயிலுக்கு ஏத்த பிஸ்னஸ்.. சும்மா சொல்லக்கூடாது முகேஷ் அம்பானி வேற லெவல்..! .
- News "உயர் ஜாதியினரிடம்" 41% ஆனால்.. முஸ்லிம்களிடம் 8% சொத்துக்கள்தான் உள்ளன: டேட்டா சொல்லும் உண்மை
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Lifestyle ஹிட்லரின் நாஜி முகாமில் நடத்தப்பட்ட திகிலூட்டும் சோதனைகள் என்னென்ன தெரியுமா? முக்கியமா இரட்டை குழந்தைகள் மீது!
- Automobiles சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
“அந்த நடிகருடன் மட்டும் லிப் லாக் சீன் ஓகே..” ஓப்பனாகச் சொன்ன தமன்னா.. இதெல்லாம் டூ டூ மச்!
Recommended Video
சென்னை: பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷனுடன் மட்டும் லிப் லாக் சீனில் நடிக்க ஆசைப் படுகிறாராம் நடிகை தமன்னா.
விஷால் ஜோடியாக நடிகை தமன்னா நடித்துள்ள ஆக்ஷன் படம் நேற்று ரிலீசாகியுள்ளது. இடையில் சில காலம் பாகுபலி, தேவி என நடிப்பிற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து, கவர்ச்சிக்கு தடை விதித்திருந்தார் தமன்னா.
மீண்டும் ஆக்ஷன் படம் மூலம் தனது கொள்கையை அவர் மாற்றிக் கொண்டுள்ளார். ஆனால் எவ்வளவு கவர்ச்சியாக நடித்தாலும் லிப் லாக் காட்சிகளுக்கு மட்டும் கறாராக நோ சொல்லி விடுகிறாராம் தமன்னா.
லிப் லாக் கன்டிஷன்
தான் ஒப்பந்தம் செய்யப்படும் போதே இந்த ஒரு கன்டிசனை மட்டும் தெளிவாகச் சொல்லி விடுகிறாராம். அது ஏன் லிப் லாக் காட்சிகளிலேயே நடிக்க மாட்டீர்களா எனக் கேட்டால், ‘நான் அப்படியாச் சொன்னேன். ஒரே ஒரு நடிகருக்கு மட்டும் நான் விதியை மாற்றிக் கொள்வேன். அவருடன் நடிப்பதென்றால் லிப் லாக் காட்சிக்கு டபுள் ஓகே' என்கிறார்.
ஹிரித்திக் மட்டும் ஓகே
இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர், "நான், திரைப்படங்களில் முத்தம் கொடுக்க மாட்டேன். எனது ஒப்பந்தத்திலும் அது குறித்து தெரிவித்து விடுவேன். ஆனால், ஹிரித்திக் ரோஷனுக்கு மட்டும் அந்த விதியிலிருந்து விலக்கு அளிப்பேன்" எனப் பேசியுள்ளார்.
தீவிர ரசிகை
தமன்னா இப்படிக் கூறுவது இது முதல்முறையல்ல. ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போதும் இதையே தான் தமன்னா கூறியிருந்தார். தமன்னா ஹிரித்திக்கின் தீவிர ரசிகை. அதனால் தான் அவருக்கு மட்டும் அந்த ஸ்பெஷல் சலுகை.
ஸ்பெஷல் ஆஃபர்
ஆனால் இதுவரை அவருடன் தமன்னா ஒரு படத்தில் கூட சேர்ந்து நடித்ததில்லை. அவரும் ஏதேதோ ஆஃபர் வழங்கித்தான் பார்க்கிறார். ஆனால், ஹிரித்திக்கை இயக்கும் இயக்குநர்கள் தான் தமன்னாவை கண்டு கொள்ள மாட்டேன் என்கிறார்கள்.