twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தியேட்டரில் தேசிய கீதத்திற்கு மதிப்பு கொடுக்காத வாலிபரை விரட்டிய ப்ரீத்தி ஜிந்தா

    By Mayura Akilan
    |

    மும்பை: சினிமா தியேட்டரில் தேசிய கீதம் ஒலித்தபோது எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்த வாலிபரை அந்த இடத்தை விட்டு வெளியேற்றியுள்ளார் நடிகை ப்ரீத்தி ஜிந்தா.

    தைரியத்திற்கும், தில்லான செயல்களுக்கும் பெயர் போனவர் ப்ரீத்தி. அதிரடியாக செயல்படக் கூடியவரும் கூட.

    எதைச் செய்தாலும் பக்காவாக செய்பவரும் கூட. முட்டாள்தனமாக இருக்காமல், புத்திசாலியாக செயல்படக் கூடியவரும் கூட.

    விரட்டிய ப்ரீத்தி ஜிந்தா

    விரட்டிய ப்ரீத்தி ஜிந்தா

    கடைசியாக இவர் நடித்த படம் இஷ்க் இன் பாரீஸ். இந்த நிலையில் தியேட்டர் ஒன்றுக்குப் போயிருந்த ப்ரீத்தி, அங்கு தேசிய கீதம் ஒலிக்கப்பட்டபோது எழுந்திருக்காமல் அமர்ந்த வாலிபரை தியேட்டரை விட்டு விரட்டியுள்ளார்.

    தேசிய கீதத்திற்கு மதிப்பு

    தேசிய கீதத்திற்கு மதிப்பு

    இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள ப்ரீத்தி ஜிந்தா, பேங் பேங் படம் பார்க்கப் போயிருந்தேன். அப்போது தியேட்டரில் ஒரு நபர் நமது தேசிய கீதம் ஒலித்தபோது எழுந்திருக்கவில்லை. இதையடுத்து நான் அவரை அங்கிருந்து வெளியே விரட்டி விட்டு விட்டேன். இதை உங்களால் நம்ப முடிகிறதா.. சரி, இப்போது நான் படம் பார்க்கும் நேரம் என்று கூறியுள்ளார்.

    மும்பை வீதிகளில் சுத்தம்

    மும்பை வீதிகளில் சுத்தம்

    இப்படி அதிரடியாக ப்ரீத்தி செயல்படுவது இது முதல் முறையல்ல. கடந்த 2005ம் ஆண்டு அவரும், ஷாருக்கானும் சேர்ந்து மும்பை நகர வீதிகளை சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.

    தூய்மை பாரதம்

    தூய்மை பாரதம்

    மேலும் பிரதமர் மோடி தூய்மை பாரதம் திட்டத்தை தொடங்கியபோது அதை வரவேற்று டிவிட் செய்த ப்ரீத்தி, தான் ஏற்கனவே அதில் முன்பே பங்கேற்று விட்டதாகவும் கூறியிருந்தார்.

    English summary
    Bollywood’s dimpled beauty Preity Zinta, who is known for being head strong, once again proved that she is a “no-nonsense” girl. The actress, who was last seen in ‘Ishq in Paris’, asked a person to leave the theatre as he refused to stand for the National Anthem of the country before the start of the movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X