எப்படிடா என்னை தொடலாம்.. ஆஸ்கர் விருது விழாவில் வெடித்த சண்டை.. விளாசி எடுத்த நடிகை டெயானா டெய்லர்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: 98வது ஆஸ்கர் விருது விழா லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் இந்திய நேரப்படி இன்று காலை நடைபெற்றது. 16 பிரிவுகளில் நாமினேட் செய்யப்பட்ட சின்னர்ஸ் திரைப்படத்துக்கு டைட்டானிக் ஹீரோ லியோனார்டோ டிகாப்ரியோ நடிப்பில் வெளியான ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர் (One Battle After Another) திரைப்படம் சிறந்த திரைப்படம் உள்ளிட்ட பல விருதுகளை குவித்து சரியான டஃப் கொடுத்தது.
அந்த படத்தில் நடித்த ஹீரோ லியோனார்டோ டிகாப்ரியோவுக்கு எப்படி விருது கிடைக்கவில்லையோ அதே போல அந்த படத்தில் நடித்த நடிகை டெயனா டெய்லருக்கும் (Teyana Taylor) சிறந்த நடிகைக்கான விருது கிடைக்கவில்லை.

ஏற்கனவே அந்த கடுப்பில் இருந்த நடிகையை ஆஸ்கர் விருது விழாவில் ஒருவர் தொட்டுவிட்டார் என அவருடன் சண்டை பிடித்துள்ள காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.
வில் ஸ்மித் அடித்த அடி: கடந்த 2022ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி நடைபெற்ற ஆஸ்கர் விருது விழாவில் முதல் முறையாக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வில் ஸ்மித் பெற்றார். ஆனால், அந்த சந்தோஷம் நீட்டிப்பதற்குள் அவர் தொகுப்பாளர் கிறிஸ் ராக்கை மேடையேறி அறைந்தது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. வில் ஸ்மித் மனைவி குறித்து தப்பான கமெண்ட்டை கிறிஸ் ராக் பேசியதால் வில் ஸ்மித் அறைந்தார். ஆனால், அவரது குற்றத்திற்காக 10 ஆண்டுகள் ஆஸ்கர் விருது விழாக்களில் பங்கேற்க முடியாது என்றும் அவர் போட்டியிட முடியாது என்றும் அகாடமி அறிவித்தது.
எப்படிடா என்னை தொடலாம்: அதன் பின்னர் நடைபெற்ற ஆஸ்கர் விருது விழாக்கள் பெரிதாக பரபரப்பு ஏதுமில்லாமல் நடைபெற்று முடிந்தன. இந்நிலையில், இன்று நடைபெற்ற ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த நடிகைக்கான நாமினேஷனில் இருந்த One Battle After Another பட நடிகை டெயனா டெய்லர் தனது விருப்பமின்றி தன்னை ஒருவர் தொட்டுவிட கடுப்பான அவர் ரொம்ப ரொம்ப தப்பான விஷயம் என அவருடன் சண்டை பிடித்த காட்சிகள் தற்போது சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











