ஹன்சிகாவின் மறு பக்கத்தை பார்த்ததில்லையே.. பார்த்தீங்க.. ஆச்சரியமாய்ருவீங்க!
சென்னை : குட்டி குஷ்பு என்று செல்லமாக அழைக்கப்படும் ஹன்சிகாவுக்குள் நிறைய நல்ல விஷயங்கள் புதைந்துள்ளன.
குட்டி குஷ்பூ என்று செல்லமாக திரையுலகில் அழைக்கப்படும் ஹன்சிகா மோத்வானி தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வந்தவர். விஜய்., தனுஷ், சூர்யா, விஷால், ஜெயம் ரவி, சிம்பு என பல முன்னணி கதாநாயகர்களோடு ஜோடி சேர்ந்து நடித்தவர்.
படு பிஸியாக இருந்த ஹன்சிகாவிற்கு தற்போது படவாய்ப்புகள் குறைந்தாலும் அவர் நடிப்பில் உருவாகிவரும் மஹா திரைப்படம் கூடிய விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்தில் சிம்பு ஒரு கெஸ்ட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

ஹன்சிகாவின் சமூக சேவை :
ஹன்சிகா தற்போது 50படங்களுக்கு மேல் நடித்து விட்டதாக கூறப்படுகிறது. தற்போது கைவசம் 3 தமிழ் படங்களிலும் ஒரு தெலுங்கு திரைப்படத்திலும் நடித்து வருகிறார். தனது சம்பளத்தில் இருந்து ஒரு பங்கினை சமூக சேவைக்காக பயன்படுத்தி வருகிறார்.

முதியோருக்கு இல்லம்
முதியோர்களுக்கென ஒரு இல்லத்தை கட் வருகிறார். மேலும் தனது ஒவ்வொரு பிறந்தநாளைக்கும் ஒரு குழந்தையை தத்தெடுத்து அவர்களுக்கு படிப்பு, உணவு மற்றும் தங்கும் வசதியையும் ஏற்பாடு செய்துகொடுத்து கவனித்து வருகிறார்.

தீபாவளி பரிசு :
ஹன்சிகாவின் தாயார் மோனா மோத்வானி தீபாவளியை முன்னிட்டு தனது மகள் ஹன்சிகாவிற்கு 12 கோடி மதிப்பிலான ஒரு ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் 8 சீரிஸ் கார் ஒன்றிணைப் பரிசளித்துள்ளார்.

இப்ப மேடம் ரொம்ப ஸ்லிம்
ஹன்சிகா தற்போது உடல் எடை குறைந்து ஸ்லிமாக காணப்படுகிறார். அவரின் இந்த ஸ்லிம் லுக் அசத்தலாக உள்ளது... அடடே நம்ம ஹன்ஸா இது என்று கூல் கூல் ஹால்ஸ் சாப்பிட்ட உணர்வுடன் ஆச்சரியமாகியுள்ளனர். ஹன்சிகாவை மறுபடியும் துறு துறுவென கொஞ்சும் இளமை துள்ளலோடு திரையில் காண காத்திருக்கின்றனர் தமிழ் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications